போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
ஆலந்தூர்: மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி!
சென்னை ஆலந்தூர் அருகே மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று இரவு சென்னை ஆலந்தூர் அருகே மது போதையில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் உள்பட இரண்டு இளைஞர்கள் மீது மின்சார ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்த சங்கர்-பிரியா தம்பதியின் மகன் சந்துரு (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதையும் படிக்க: மனைவியின் தனிப்பட்ட உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது: நீதிமன்றம்
இந்நிலையில் நேற்று(ஜன. 1) புத்தாண்டு என்பதால் இவரும் அவருடைய நண்பர் நரேஷும் (29) மது அருந்திவிட்டு மது போதையில் என்.ஜி.ஓ. காலனி மற்றும் ஆலந்தூருக்கு இடையே உள்ள மின்சார ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் இருவர் மீதும் மோதியது. இதனால் சந்துரு மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சந்துருவிற்கு தலையிலும் நரேஷிற்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் ரயில்வே போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.