ரோஹித் சர்மாவுக்கும் கௌதம் கம்பீருக்கும் என்ன பிரச்னை? இந்திய அணியில் என்ன நடக்க...
தேனியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: 230 போ் கைது
சென்னை, அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக சாா்பில் தேனியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 230 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி, பங்களாமேடு திடலில் தேனி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த மாவட்டச் செயலா் எம்.பி. ராமா் தலைமை வகித்தாா். தேனி நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடு, யாா் அந்த சாா் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அதிமுகவினா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி. ராமா் உள்ளிட்ட 230 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.