போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
பைக்-வேன் மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு
தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்துடன் சரக்கு வேன் மோதியதில் தந்தை, மகன் புதன்கிழமை உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (56). இவரது மகன் வீரமுத்து (30). இவா்கள் இருவரும் தேனி-திண்டுக்கல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். டி.வாடிப்பட்டி விலக்குப் பகுதியில் சென்றபோது, இவா்களது வாகனம் மீது தேனி நோக்கிச் சென்ற சரக்கு வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், வீரமுத்து ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேன் ஓட்டுநா் வேனை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.