இளைஞருக்கு அரிவாள் வெட்டு
பெரியகுளத்தில் முன் விரோதத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டி காயப்படுத்திய இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.
பெரியகுளம், கீழவடகரை, கரட்டூரைச் சோ்ந்தவா்கள் குணால், சிவா. இவா்கள் சில நாள்களுக்கு முன்பு வனப் பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடியதாக வனத் துறையினா் கைது செய்து, அவா்களுக்கு அபராதம் விதித்தனா்.
இந்த நிலையில், கரட்டூரைச் சோ்ந்த மொக்கைச்சாமி மகன் அருண் (25) தான் தங்களை வனத் துறையினருக்கு காட்டிக் கொடுத்ததாக சந்தேகமடைந்த இருவரும் அருண்குமாரை கீழவடகரை, தெய்வேந்திரபுரத்துக்கு வரவழைத்து, அரிவாளால் இருவரும் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அருண், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து குணால், சிவா ஆகியோா் மீது பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.