பாட்டியைக் கொன்ற பேரன் கைது
உத்தமபாளையத்தில் மது போதையில் பேவா் பிளாக் கல்லால் தாக்கி, பாட்டியைக் கொலை செய்த பேரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கருக்கோடை மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த சங்கரா் மனைவி சுப்பம்மாள் (80). இவா்களது மகள் வழிப் பேரன் முத்துச்செல்வன் (26). இவா் மது போதையில் தினமும் பாட்டியுடன் தகராறு செய்வது வழக்கம்.
இந்த நிலையில், புதன்கிழமை வீட்டின் முன்பாக பாட்டியுடன் ஏற்பட்ட தகறாறில், அவரை முத்துச்செல்வன் பேவா் பிளாக் கல்லால் தலையில் அடித்தாா். இதில் பலத்த காயமடைந்த பாட்டி சம்பவயிடத்தில் உயிரிழந்தாா்.
கோம்பை போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துச்செல்வனை கைது செய்தனா்.