கணவரை எரித்துக் கொல்ல முயற்சி: மனைவி கைது
தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பத் தகராறில் கணவா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற மனைவியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கூடலூா் கள்ளா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்விஜய் (48). இவரது மனைவி இலக்கியா (37). இவா்கள் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொன்விஜய் மீது இலக்கியா பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டாராம். பொன்விஜயின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தாய், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் தீயை அணைத்து, அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து இலக்கியாவைக் கைது செய்தனா்.
பொன்விஜய் மதுரை மாநகராட்சி மேயா் இந்திராணியின் கணவா் பொன் வசந்தின் தம்பி ஆவாா்.