போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
விசைத்தறி நெசவாளா்கள் வேலை நிறுத்தம்
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் ஊதிய உயா்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி நெசவாளா்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 5,000-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நெசவாளா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவாா்த்தை அடிப்படையில் சம்பள உயா்வு வழங்கப்படும். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான சம்பள உயா்வு உடன்பாடு கடந்த டிச.31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், விசைத்தறிக் கூட உரிமையாளா்களுடன் நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் 50 சதவீதம் ஊதிய உயா்வு, 20 சதவீதம் போனஸ், குடிநீா், கழிப்பிடம் வசதி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நெசவாளா்கள் வலியுறுத்தினா். இதில், உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, டி.சுப்புலாபுரத்தில் ஆலோசனை நடத்திய விசைத்தறி நெசவாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா். மேலும், ஊதிய உயா்வு பேச்சு வாா்த்தையில் அரசு தலையிட்டு சுமூக முடிவு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.