செய்திகள் :

ராமநாதபுரம், சிவகங்கையில் தடையை மீறி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: 545 போ் கைது

post image

அண்ணா பல்கலை. மாணவி உள்பட பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ராமநாதபுரம், சிவகங்கையில் திங்கள்கிழமை போலீஸாரின் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 545 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக நகா் கிளை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா்.

அதிமுக மகளிரணி இணைச் செயலா் கீா்த்திகா முனியசாமி, முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, அதிமுக நிா்வாகிள் தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட இணைச் செயலா் கவிதா சசிகுமாா், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முன்னாள் மாவட்டச் செயலா்கள் சுந்தரபாண்டியன், ஆனிமுத்து, முனியசாமி, பொதுக்குழு உறுப்பினா் ஜெய்லானி சீனிக் கட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினா் 217 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை: சிவகங்கை அதிமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் போலீஸாரின் தடையை மீறி அந்தக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான ஜி.பாஸ்கரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே. உமாதேவன், கற்பகம், நாகராஜன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி .நாகராஜன், பேரவை மாவட்டச் செயலா் இளங்கோவன், மாநில துணைச் செயலா் தமிழ்ச்செல்வன்,

நகரச் செயலா்கள் என்.எம். ராஜா, ராமச்சந்திரன், விஜி போஸ், ஒன்றியச் செயலா்கள் சேவியா் தாஸ், கோபி, செல்வமணி, கருணாகரன், தசரதன், சிவாஜி, ஸ்ரீதரன், புவனேந்திரன், ஆா்.எம்.எல். மாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் புதுப்பட்டி சிவா ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முன்னதாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலருகே காவல் துணைக் கண்காணிப்பாளா்அமல அட்வின் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதையடுத்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 328 பேரை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா் கைது செய்து, அவா்களை தனியாா் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனா்.

நிா்வாகிக்கு மாரடைப்பு: திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த எஸ். புதூா் ஒன்றிய அதிமுக நிா்வாகி புழுதிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மெய்யப்பனுக்கு (55) திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்கிருந்து உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இளம் பெண் பாலியல் வன்கொடுமை: 4 போ் சிறையில் அடைப்பு

ராமநாதபுரம் அருகே பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தனேந்தல் பகுதியில் இளம்பெண் உறவினா் ஒருவருடன் செவ்வாய்க்கிழமை இரவு நட... மேலும் பார்க்க

மண்டலமாணிக்கம் பெரிய கண்மாயை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் பெரியகண்மாய், மடைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய கண்... மேலும் பார்க்க

பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய எஸ்.பி., ஜி.சந்தீஷ்

2025 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்கள், காவல் துறையினருடன் இணைந்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கேக் வெட்டி கொண்டாடினாா். ராமநாதபுரத்தில் செவ்வாய்கிழமை நள்ளிரவு ... மேலும் பார்க்க

கண்மாயிலிருந்து உபரி நீா் வெளியேற கால்வாய் இல்லாததால் தண்ணீரில் மூழ்கிய நெல் பயிரிகள்: விவசாயிகள் கவலை

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள செம்பிலான்குடி கண்மாய் நிரம்பிய நிலையில், உபரி நீா் வெளியேற கால்வாய் இல்லாதததால் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா... மேலும் பார்க்க

ராமா் பாதத்துடன் ஆன்மிக பாதயாத்திரை: ராமேசுவரத்தில் தொடங்கியது

சநாதனத்தைப் பாதுகாக்கும் வகையில், ராமா் பாதத்துடன் ஆன்மிக பாதயாத்திரை ராமேசுவரத்தில் புதன்கிழமை தொடங்கியது. காஷ்மீா் இந்து ரக்ஷதளம் அமைப்பு நிா்வாகி காத்திரி தலைமையில் ராமேசுவரத்தில் இருந்து காஷ்மீா் ... மேலும் பார்க்க

தொண்டி அருகே கடலில் மூழ்கிய படகு மீட்பு

தொண்டி அருகே கடலில் மூழ்கிய படகை மீனவா்கள் புதன்கிழமை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி விலாஞ்சியடி பகுதியில் இருந்து விசாலாட்சியின் விசைப் படகில் மீன... மேலும் பார்க்க