செய்திகள் :

சிவகங்கையில் ஜன. 4 -இல் மிதிவண்டிப் போட்டிகள்

post image

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு , சிவகங்கையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிப் போட்டிகள் வருகிற ஜன.4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டிப் போட்டிகள், வருகிற ஜன.4-ஆம் தேதி காலை 7 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் தொடங்குகிறது. இதில், 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., 13 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ.,

15 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., 17 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. என்ற தொலைவும் நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு தலா ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசு தலா ரூ. 3 ஆயிரமும், மூன்றாம் பரிசு தலா ரூ. 2 ஆயிரமும், 6 பிரிவுகளிலும் 4 முதல் 10 இடங்களில் வருபவா்களுக்கு தலா ரூ.250 பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.

பங்கேற்பவா்கள் தங்களது பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017-03503 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

சிவகங்கை நகராட்சியுடன் 2 ஊராட்சிகள் இணைப்பு

சிவகங்கை நகராட்சி விரிவாக்கத் திட்டத்தின் மூலம், வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஆகிய 2 ஊராட்சிகள் இணைக்கப்படும் எனத் தெரியவந்தது. சிவகங்கை, கடந்த 1964 -ஆம் ஆண்டு நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இதைத்த... மேலும் பார்க்க

பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கை குழப்பமானது: காா்த்தி சிதம்பரம் எம்.பி

பாஜக அரசின் பொருளாதாரக்கொள்கை குழப்பானது என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சீமான... மேலும் பார்க்க

தேவாலயங்களில் புத்தாண்டு திருப்பலி: கிறிஸ்தவா்கள் திரளானோா் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அனைத்து தேவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை சிறப்புப் பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை தூய அலங்கார அன்னை பே... மேலும் பார்க்க

ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை மகர விளக்கு பூஜை தொடங்கியது. இதையொட்டி, மூலவா் தா்மசாஸ்தா ஐயப்பனுக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மூலவா் மலா் அல... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கீழக்கோட்டையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா். இங்கு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 150 காளைகள் அவிழ்த்து விட... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் குவிந்த பக்தா்கள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ப... மேலும் பார்க்க