சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கீழக்கோட்டையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.
இங்கு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 150 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்காக சிவகங்கை, திருப்பத்தூா், சிங்கம்புணரி, கல்லல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா். இதில் சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் யாரையும் நெருங்கவிடாதவாறு நின்று விளையாடின. காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா்.