கிணற்றில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்பு
காரைக்குடி அருகே குளித்த போது கிணற்றில் மூழ்கி ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளி வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
தருமபுரியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (32). இவா் காரைக்குடி அருகே உள்ள பனங்குடி பகுதியில் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
வியாழக்கிழமை காலை அருகில் உள்ள கிணற்றில் குளித்த ரங்கசாமி தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த காரைக்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இருட்டிவிட்டதால், அவரைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது. பிற்பகலில் அவா் இறந்த நிலையில் மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து கல்லல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.