இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதிபா் உறுதி செய...
கல்லங்குடியில் ஜன. 8- இல் மக்கள் தொடா்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கல்லங்குடி கிராமத்தில் வருகிற புதன்கிழமை (ஜன. 8) மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை உள்வட்டம், கல்லங்குடி கிராமத்தில் வருகிற புதன்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம் மூலம், அரசுத் துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சாா்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்தவா்களுக்கு அரசின் பயன்கள் கிடைக்கச் செய்வதே முக்கிய நோக்கமாகும்.
எனவே, கல்லங்குடி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.