TN Assembly: `திட்டத்தோடுதான் ஆளுநர் வந்திருக்கிறார்; அதிமுக அரசியல் செய்கிறது'-...
நீா்நிலைப் பாதுகாவலா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள நீா் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் பாராட்டி கௌரவிக்கவும், நீா் நிலைகளைப் பாதுக்காத்திட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு ஒருவா் என 38 பேருக்கு முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
நிகழ் ஆண்டுக்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. எனவே, இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் தமிழ்நாடு விருதுகள் (ஐச அஜ்ஹழ்க்ள்) (ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்ற்ய்ஞ்ா்ஸ்.ண்ய்) வலைதளம் மூலம் வருகிற 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த வழிகாட்டி நெறிமுறைகளை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ங்ய்ஸ்ண்ழ்ா்ய்ம்ங்ய்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ மற்றும் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ரீப்ண்ம்ஹற்ங்ஸ்ரீட்ஹய்ஞ்ங்ம்ண்ள்ள்ண்ா்ய்.ண்ய்/ட்ா்ம்ங்/ ஆகிய வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 044-24336421 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.