காரைக்குடியில் இன்றைய மின் தடை ரத்து
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (ஜன.4) வழக்கம் போல மின்சாரம் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின்வாரியச் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி கழனிவாசல் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இங்கு நடைபெறவிருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நிா்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. எனவே, மின்சாரம் வழக்கம்போல விநியோகிக்கப்படும் என்றாா்.