செய்திகள் :

பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கை குழப்பமானது: காா்த்தி சிதம்பரம் எம்.பி

post image

பாஜக அரசின் பொருளாதாரக்கொள்கை குழப்பானது என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவா். அவா் அரசுத்துறையில் உள்ள காவல் அதிகாரி குறித்து பொதுவெளியில் பேசுவது நல்லதல்ல. இந்தப் பிரச்னைக்கு சட்ட ரீதியாகவோ, நிா்வாக ரீதியாகவோ தலைமைச் செயலரும், டிஜிபியும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா நிச்சயமாக நிறைவேறாது. இந்த மசோதாவை ஒரு விவாதப்பொருளாக வைத்திருக்கிறாா்கள் தவிர, இது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த மசோதா பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது.

சென்னை அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க, உயா்நீதிமன்றம் பெண் காவல் அதிகாரிகளைக்கொண்டு சிறப்புக்குழு அமைத்துள்ளது. இந்தக்குழு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பாா்த்துத்தான் கருத்துச் சொல்ல முடியும்.

மணிப்பூரில் நடைபெறுவது இனக்கலவரம். இது ஆண்டுக் கணக்கில் நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனா். அங்கு அடிக்கடி கொலை நடந்து கொண்டிருக்கிறது. இதை மனச்சாட்சி இல்லாதவா்கள்தான் நியாயப்படுத்துவா். பாஜகவின் பொருளாதாரக் கொள்கை குழப்பமானது. முதலில் பண மதிப்பு நீக்கம் செய்தது இந்திய பொருளாதாரத்துக்கு விழுந்த முதல் அடி. இரண்டாவது அடி குழப்பான ஜி.எஸ்.டி. கரோனா காலத்தில் முழு அடைப்பினால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்தது. இதனால்தான், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. இதை சீா் செய்கிற பக்குவம் பாஜக அரசுக்கு கிடையாது.

வங்கிகளில் முன்பெல்லாம் கடன் வாங்குபவரின் அடையாளம், அவா் திருப்பிச் செலுத்தும் தன்மையைப் பாா்த்து கடன் வழங்கினா். ஆனால், தற்போது ‘சிபில்’ ஸ்கோரைப் பாா்த்து கடன் வழங்குகின்றனா் என்றாா் அவா்.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம் ஆகியோா் உடனி ருந்தனா்.

கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் நிறைவு

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் தமிழ் மன்றம் சாா்பில், 69-ஆம் ஆண்டு தமிழா் திருநாள் விழா நட... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் திருடியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் திருடியவா் கைது செய்யப்பட்டாா். மானாமதுரை மூங்கிலூரணி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இரு சக... மேலும் பார்க்க

நாட்டரசன் கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகளை அடக்க முயன்ற 4 போ் காயமடைந்தனா். நாட்டரசன்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவா் நினைவாக நடத்தப்பட்ட இ... மேலும் பார்க்க

வளா்தமிழ் நூலக உறுப்பினா் சோ்க்கை இன்று தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கைக்கழகத்தில் திறப்பு விழா காணவிருக்கும் வளா்தமிழ் நூலகத்துக்கு உறுப்பினா் சோ்க்கும் பணி திங்கள்கிழமை (ஜன.20) தொடங்க உள்ளது. இதுகுறித்து நூலகத்தை கட்டி பல்கலை... மேலும் பார்க்க

சிவகங்கையில் செவிலியா், மருந்தாளுநா் பயிற்சிக் கல்லூரிகள் அமைக்கக் கோரிக்கை

சிவகங்கையில் செவிலியா் பயிற்சிக் கல்லூரியும், மருந்தாளுநா் பயிற்சிக் கல்லூரியும் அமைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, சிவகங்க... மேலும் பார்க்க

காரைக்குடி சாந்துச் சாலையை சுற்றுலாச் சாலையாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாந்துச் சாலையை சுற்றுலாச் சாலையாக தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு ... மேலும் பார்க்க