செய்திகள் :

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலி!

post image

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.

பிகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தொடர்ந்து 7 பேர் பலியானதைத் தொடர்ந்து அவர்கள் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் முதல் மரணம் ஏற்பட்டு 4 நாள்கள் கடந்த நிலையில் பலியான 7 பேரின் உடல்களும் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில் பலியான அனைவரும் லாரிய காவல் நிலைய வட்டத்துக்குள் இறந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாக அந்தப் பகுதிவாசிகள் தெரிவித்த நிலையில், அதில் ஒருவர் டிராக்டர் விபத்தில் பலியானதாகவும், மற்றொருவர் பக்கவாதத்தில் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | சம்பல் வன்முறை: மேலும் 10 போ் கைது

"முதல் மரணம் ஜனவரி 15 ஆம் தேதி நிகழ்ந்தது. ஆனால் இன்றுதான் (ஜன. 20) இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. மீதமுள்ள 5 மரணங்களுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் ஏழு உடல்களும் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே தகனம் செய்யப்பட்டன. இதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் ஒரு குழு ஒன்றை அமைத்துள்ளோம்," என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பலியான நபர் ஒருவரின் சகோதரர் கூறுகையில், “என் சகோதரர் பிரதீப் அவரது நண்பருடன் கள்ளச்சாராயம் குடித்தார். இருவருமே இறந்துவிட்டனர்” என்று கூறினார்.

பிகாரில் மது விற்பதற்கும் அருந்துவதற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி கோவிலுக்கு ரூ. 6 கோடி நன்கொடை வழங்கிய சென்னை பக்தர்!

சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 6 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த பெருமாள் பக்தரான வர்தமன் ஜெயின் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக ரூ. 6 கோடி வழங்க... மேலும் பார்க்க

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாட்னா வந்துள்ளார் நிதிஷ்குமார். மேலும் பார்க்க

எந்தவிதமான தண்டனை வேண்டும்? நீதிபதி கேள்விக்கு சஞ்சய் ராய் அளித்த பதில்!

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்-க்கு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவிக்கவிருக்கிறது.கொல்கத்தா பெண் மருத்துவா... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றின் முதல் வரைவு காலனித்துவவாதிகளால் திரிக்கப்பட்டது: ஜக்தீப் தன்கர்

இந்திய வரலாற்றின் முதல் வரைவு காலனித்துவவாதிகளால் திரித்து எழுதப்பட்டது என இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தில்லியில் பாரதிய வித்யா பவனில் நந்த்லால் நுவால் இந்தியவியல்... மேலும் பார்க்க

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன: காங்கிரஸ்

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலைய... மேலும் பார்க்க

எஃப்ஐஆர் பதிவு.. பாஜகவுக்கு ராகுல் மீதான அச்சத்தையே காட்டுகிறது: அபய் துபே

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ததற்கு பாஜகவை காங்கிரஸ் திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது. தில்லியில் காங்கிரஸின் புதிய தலைமையகம் திறப்ப... மேலும் பார்க்க