செய்திகள் :

எஃப்ஐஆர் பதிவு.. பாஜகவுக்கு ராகுல் மீதான அச்சத்தையே காட்டுகிறது: அபய் துபே

post image

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ததற்கு பாஜகவை காங்கிரஸ் திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது.

தில்லியில் காங்கிரஸின் புதிய தலைமையகம் திறப்பு விழாவின் போது ராகுல் காந்தியின் கருத்துக்கள் பேச்சு சுதந்திரத்தின் எல்லையை மீறியதாகவும், பொது ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அசாமின் மோன்ஜித் சேத்தியா தனது புகாரில் குற்றம் சாட்டினார். அங்குள்ள பான் பஜார் போலீசில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபய் துபே கூறியதாவது,

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மிகவும் பயந்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இருப்பினும், பாஜக ஆளும் எந்த மாநிலமும் ராகுல் காந்தியின் உறுதியையும் அவரது இலக்குகளுக்கான அர்ப்பணிப்பையும் குறைக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்தியாவின் "உண்மையான சுதந்திரம் குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு ராகுல்காந்தி பதிலளித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் (காங்கிரஸ்) பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்.

நாங்கள் நியாயமான போராட்டத்தை நடத்துகிறோம். இது பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் அமைப்புகளுக்கு எதிரானது என்று நீங்கள் நம்பினால், அவர்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி விட்டார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்றார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டில் இருந்து கொண்டே இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்று உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளதாக கூறி பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் சமீப காலமாக பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று வருவதும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. பாட்னா சென்றபோது, ​​காந்தி 'சம்விதன் சுரக்ஷா சம்மேளனத்தில்' உரையாற்றினார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்தார்.

ராகுல் தனது மேற்குவங்க பயணத்தின் போது மமதா பானர்ஜியைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டதாகவும், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டதால், இந்தியா கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் வெளிவந்தன.

ஊகங்களுக்குப் பதிலளித்த துபே, பாஜக அடிப்படையற்ற வதந்திகளைப் பரப்புகிறது. ராகுல் காந்தி லாலு யாதவை நேரில் சந்தித்தாலும், பாஜக அதில் சிக்கலை ஏற்படுத்த நினைக்கின்றது.

இந்தியா கூட்டமைப்பைப் பொறுத்தவரை, ஒரு முறை சந்திப்பைத் திட்டமிடப்பட்டாலும், அதன் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திப்பை நிகழ்த்துவார்கள் என்று துபே தெளிவுபடுத்தினார்.

யுஜிசி புதிய விதிகள்: 9 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நி... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம்

கொல்கத்தா பெண் மருத்துவா் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு... மேலும் பார்க்க

யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில், பல்கலைக்கழகங்களில்... மேலும் பார்க்க

எய்ம்ஸ் அவலநிலை: ஜெ.பி. நட்டா, அதிஷிக்கு ராகுல் கடிதம்!

தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழ்ந்துவரும் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா மற்றும் தில்லி முதல்வர் அதிஷிக்கு, காங்கிர... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தில் கேஜரிவால் மீது பாஜக வேட்பாளர் புகார்!

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புது தில்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். வருகிற பிப்ரவரி ... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள்

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொல்கத்தாவில் பணியில் இருந்த பெண் மருத்து... மேலும் பார்க்க