60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்குகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) உயா்ந்த வண்ணம் உள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,450க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.59,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டென்னிஸ் வீராங்கனையை மணந்தார் நீரஜ் சோப்ரா!
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,140க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.49,120க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி, ஒரு கிராம் ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.