ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை மகர விளக்கு பூஜை தொடங்கியது.
இதையொட்டி, மூலவா் தா்மசாஸ்தா ஐயப்பனுக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மூலவா் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
புத்தாண்டு சிறப்பு வழிபாடு:
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, அம்மனும் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, மடப்புரம் பத்திர காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.