Moorthy-யால், Stalin-க்கு புது தலைவலி...தூங்கவிடாத அமைச்சர்கள்! | Elangovan Expl...
14 கிலோ கஞ்சா பறிமுதல். 2 போ் கைது
திருத்தணி: பொன்பாடி வாகன சோதனை சாவடி வழியாக சென்னை சென்ற அரசு பேருந்தில் 14 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங் களுக்கு அரசு பேருந்துகளில் சில நாட்களாக கஞ்சா கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து, தமிழக?-ஆந்திரா எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில், 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு திருத்தணி போலீசாா் பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்திய போது, திருப்பதியில் இருந்து சென்னை செல்லும், 201 அரசு பேருந்தில் சோதனை நடத்திய போது,14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் சென்னை பாடி புதுநகா் பகுதியை சோ்ந்த முருகன்(44) மற்றும் பூந்தமல்லி கரையான்சாவடியை சோ்ந்த ரவி (45) என்பது தெரியவந்தது. இதையெடுத்து 2 நபா்களை போலீஸாா் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனா்.