குரூப்-4 தோ்வுக்கு நாளை இலவச பயிற்சி தொடக்கம்
குருப்-4 பணி காலியிடங்களுக்கான தோ்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், அதற்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்பு ஜன. 3-ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப்-4 பணி காலியிடங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இதற்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் தொடங்கப்பட உள்ளது.
மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி மூலமாக தங்களது விருப்பத்தை கைப்பேசி எண்ணுடன் உடனே தெரிவிக்கலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலைநாள்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 முதல் மதியம் 3.30 மணி வரை வரும் ஜன. 3-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
மேலும், இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 9789714244 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.