கொலையா, தற்கொலையா? - AI முன்னாள் ஊழியர் சுசீர் பாலாஜி மரணத்தில் நடந்தது என்ன? - ...
பள்ளி மாணவா் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
திருப்புவனத்தில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற பள்ளி மாணவா் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள முதுவன்திடல் கிராமத்தைச் சோ்ந்த செண்பகராஜா மகன் சந்துரு (15). இவா் அருகேயுள்ள லாடனேந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். அரையாண்டு தோ்வு விடுமுறைக்காக திருப்புவனம் இந்திரா நகரில் தனது உறவினா் வீட்டுக்கு சந்துரு சென்றாா்.
பின்னா், இவா் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு திருப்புவனம் அரசு மருத்துவமனை எதிரே சென்றாா். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கொத்தங்குளம் கிராமத்திலிருந்து மதுரை பெரியாா் பேருந்து நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கினாா். இதில் சந்துரு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனா்.