`இனி பொதுமக்களுக்கு இது கிடைக்காது!' - சத்தமே இல்லாமல் தேர்தல் விதிகளில் திருத்த...
மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு சிறை!
மும்பையில் மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட முன்னாள் பேராசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை தானே நகரில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் மருத்துவர் சைலேஷ்வர் நடராஜன் (63). அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருந்த இவர் தற்போது ராஜிநாமா செய்துவிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் தங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாகவும், பாடம் நடத்துகையில் தவறாகத் தொடுவதாகவும் எம்பிபிஎஸ் பயிற்சி மாணவிகள் பலரும் புகாரளித்தனர்.
இதையும் படிக்க | அமித் ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது: கர்நாடக அமைச்சர் விமர்சனம்!
இதனைத் தொடர்ந்து அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அப்போது அவரைக் கைது செய்யக்கோரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்து (டிச. 19) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.