மேட்டூா் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த பகுதிகளுக்கு செல்ல தடை!
அல்லு அர்ஜுனுக்கு கை, கால், கிட்னி போய்விட்டதா?: ரேவந்த் ரெட்டி கடும் தாக்கு!
நடிகர் அல்லு அர்ஜுனை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூலித்து ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், படத்தின் சிறப்பு திரையிடலின்போது திரையரங்குக்கு திடீரென வந்த அல்லு அர்ஜுனால் ஏற்பட்ட நெரிசலில் ரேவதி என்கிற பெண் உயிரிழந்தார்.
முறையான, அறிவிப்பு இல்லாமல் அல்லு அர்ஜுன் சென்றதால்தான் நெரிசல் ஏற்பட்டது என காவல்துறை வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜுனை கைது செய்தனர். ஆனால், கைதான 12 மணி நேரத்திலேயே சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார்.
இதையும் படிக்க: ஒரு ஸ்ரீவள்ளியின் மரணமும் குற்றவாளி புஷ்பாவும்!
வெளியே வந்தவரைக் காண தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்று தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு மரணத்தை வைத்து புஷ்பா - 2 படத்தை மார்க்கெட்டிங் செய்கிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் ரெட்டி சட்டப்பேரவையில் இச்சம்பவம் குறித்து பேசினார். அதில், “நடிகர் அல்லு அர்ஜுன் சில மணிநேரங்கள் சிறையில் இருந்தார். அவரைக் காண தெலுங்கு திரையுலகமே சென்றிருக்கிறது. அவருக்கு கை, கால், கிட்னி ஏதாவது போய்விட்டதா? எதற்காக இந்த ஆதரவுகள்? நெரிசலில் சிக்கி பலியான பெண்ணைக் குறித்தோ அவரது மகனைக் குறித்தோ இவர்கள் கவலைப்பட்டார்களா? இந்த ஆதரவு மூலம் தெலுங்கு சினிமா திரையுலகம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது? அல்லு அர்ஜுன் என்ன மாதிரியான மனிதர்?” என கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 படப்பிடிப்பு எப்போது?