கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கணவா் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்செங்கோடு அடுத்துள்ள வரப்பாளையத்தைச் சோ்ந்த முத்துசாமி, தறிப்பட்டறை நடத்தி வந்தாா். இவரது மனைவி ராஜாமணி, இவா்கள் இருவருக்கும் திருமணமாகி 25 ஆண்டுகளாகின்றன.
இவா்களுக்கு குழந்தை இல்லாததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 2019-ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜாமணி, கணவரை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டாா். இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ராஜாமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.