செய்திகள் :

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தை கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் படுகாயம்!

post image

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் மருத்துவர் ஒருவர் நடத்திய கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணத்தின் மாக்டபா் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த சிறப்பு சந்தையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மருத்துவர் ஒருவர், வேகமாக காரை ஒட்டி வந்து அங்கிருந்தவர்களின் மீது மோதச் செய்தார்.

இதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியானதுடன், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: வாரக்கணக்கில் எரியப்போகும் பயங்கர காட்டுத்தீ!

சிகிச்சைப் பெற்று வந்த 7 இந்தியர்களில் தற்போது 4 பேர் நலமாகி வீடுத்திரும்பியுள்ள நிலையில் இன்னும் 3 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஜெர்மனியிலுள்ள இந்தியத் தூதரகம் படுகாயம் அடைந்த இந்தியர்களுக்கான அனைத்து சேவைகளையும் மேற்கொண்டு அவர்களது உடல் நிலைகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் எத்தனை இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் முழுவதுமாக வெளியாகவில்லை.

ஜம்முவில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சோப்பூரின் தங்கிவாச்சா பகுதியில், இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ... மேலும் பார்க்க

தென் கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள் வெற்றி!

தென் கொரியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் நேற்று (டிச.21) அமெரிக்க விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்த... மேலும் பார்க்க

வணிக வளாகத்தினுள் புகுந்த வாகனம்: 5 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தப்பித்து ஒடிய வாகனம் வணிக வளாகத்தினுள் புகுந்ததில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், அந்த வாகன ஒட்டுநரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.டெக்ஸாஸ் மாகாண நெடுஞ்சாலை காவல்துற... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் மாயம்!

காங்கோ நாட்டில் அதிகப்படியான நபர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.வடகிழக்கு காங்கோவிலுள்ள புசிரா நதியில் கடந்த வெள்ளிகிழமை (டிச.20) போண்டே எ... மேலும் பார்க்க

பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு இபிஎஸ்ஸுக்கு இருக்கிறதா? - முதல்வர் ஸ்டாலின்

பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு இபிஎஸ்ஸுக்கு இருக்கிறதா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (22-12-2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் ... மேலும் பார்க்க

டிச. 26, 27-ல் சென்னை, புறநகரில் மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிச. 26, 27 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்ததாவத... மேலும் பார்க்க