செய்திகள் :

பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது!

post image

குவைத் நாட்டின் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்" விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சனிக்கிழமை குவைத் சென்றடைந்தார். குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது விடுத்த அழைப்பின்பேரில், அந்நாட்டு தலைநகா் குவைத் சிட்டிக்கு வந்த அவரை, அந்நாட்டின் முதல் துணை பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஷேக் ஃபஹாத், வெளியுறவுத் துறை அமைச்சா் அப்துல்லா அலி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

அங்குள்ள சொகுசு விடுதியில் அவருக்கு மேள தாளங்கள் மற்றும் கதகளி நடன நிகழ்ச்சியுடன் இந்திய வம்சாவளியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

பின்னர், இந்திய சமூகத்தினா் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, ஒவ்வொரு ஆண்டும் குவைத் நாட்டுக்கு நூற்றுக்கணக்கான இந்திய பணியாளா்கள் வருகின்றனா். அவா்கள், இந்திய திறன், தொழில்நுட்பம், பாரம்பரிய சராம்சத்துடன் குவைத் நாட்டுக்கு வலுசோ்க்கிறாா்கள். இந்நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பில் இந்திய மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளா்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனா்.

இந்திய ஆசிரியா்கள் குவைத் எதிா்கால சந்ததியினரின் பிரகாசமான வாழ்வை வடிவமைப்பதில் பங்காற்றுகின்றனா். நான் குவைத் நாட்டின் தலைவா்களுடன் பேசும்போதெல்லாம், அவா்கள் இந்திய சமூகத்தினரை புகழ்வா்.

வெளிநாடுகளில் இருந்து பணியாளா்கள் பணம் அனுப்புவதில் இப்போது உலகுக்கே வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது. இதற்கு இந்திய பணியாளா்களின் கடின உழைப்பே காரணம்.

இதையும் படிக்க |நாளை தில்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல் முறையாக பங்கேற்கும் மோடி

குவைத் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்" விருதுடன் பிரதமர் நரேந்திர மோடி- குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது.

நமது இரு நாடுகளுக்கு இடையிலான உறவானது, நாகரிகம், வா்த்தகம், கடல்வழி தொடா்புகள், மக்களின் அன்பு ஆகியவற்றில் வேரூன்றியதாகும். ‘புதிய குவைத்’ கட்டமைக்க தேவையான மனிதவளம், திறன் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவால் வழங்க முடியும். இந்தியாவும், குவைத்தும் வருங்காலத்தில் குறிப்பிடத்தக்க கூட்டுறவு நாடுகளாக உருவெடுக்கும் என்றாா்.

குவைத் சிட்டியில் 101 வயது முன்னாள் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான மங்கல் செயின் ஹான்டாவை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

இந்த நிலையில், குவைத் நாட்டின் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்" விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக மோடி குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் தனது உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்" விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இது பிரதமர் மோடிக்கு ஒரு நாடு அளிக்கும் 20 ஆவது சர்வதேச கௌரவம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாளமாக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போன்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை பள்ளிகளுக்கு பரிசளித்த ராணுவம்!

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற நாய்களை தில்லியில் உள்ள சிறப்புப் பள்ளிக்கு இந்திய ராணுவம் பரிசளித்துள்ளது.தங்கள் உயிர்களை பொருட்படுத்தாமல் செயல்பட்டவர்கள் வீரர்களாக இருந்தாலும், நாயாக இருந்தாலும் உரி... மேலும் பார்க்க

வீழ்ச்சியின் விளிம்பில் காங்கிரஸ்: பசவராஜ் பொம்மை

காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியில் விளிம்பில் உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களுடன் பசவராஜ் பொம்மை பேசியதாவது, ... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகையிட்டு கல்வீச்சு!

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீடு முற்றுகையிடப்பட்டு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. ஒஸ்மானியா பல்கலைக்கழக செயற்குழுவை சேர்ந்த உறுப்பினர்களாகக் கருதப்படும் சிலர், ஹ... மேலும் பார்க்க

தவறான விளம்பரம்: ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்

புதுதில்லி: குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களை திசை திருப்பும் வகையில், 2023 குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக தனியார் போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனமா... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி!

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஒருங்கிணைக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். புது தில்லியில் நாளை (டிச. 23) சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேர... மேலும் பார்க்க

கொசுவர்த்தியால் வீட்டில் தீ விபத்து: இரு குழந்தைகள் பலி!

கொசுவர்த்தியை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில், வீட்டிலிருந்த இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் நகரிலுள்ள ஒரு வீட்டில் நீ... மேலும் பார்க்க