செய்திகள் :

`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான் காட்டம்

post image

திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் , ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் அதற்காக போராடி நாங்கள் தடுத்து வருகிறோம்.

புகார் அளித்தாலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேராளவில் தமிழக கழிவுகளை எடுத்து சென்று கொட்டினால் அந்த மாநிலத்தின் மக்கள் அதை எதிர்ப்பார்கள். தமிழகத்தின் வளங்களை கொள்ளையடித்துச் சென்று விட்டு கழிவுகளை இங்கு வந்து கொட்டுகிறார்கள். இந்த பிரச்னை இந்த ஆட்சியில் மட்டுமல்ல, சென்ற ஆட்சியிலிருந்தே நடக்கிறது. இது குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. தி.மு.க ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை எப்படி பரணி பாடப்போகிறார்கள் என்பதை கேட்போம். வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நீதிமன்ற வாயிலில் கொலை, மருத்துவமனைக்குள் கொலை, பள்ளிக்குள் கொலை என பல இடங்களில் கொலை நடக்கிறது. ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களை வீதியில் போராட வைத்துவிட்டு சிறந்த ஆட்சி தருகிறோம் என்கிறார்கள். போராட்டங்களை எதிர்கொள்ள துணிவு இல்லாத ஆட்சியாளர்களாக இந்த ஆட்சியாளர்கள் உள்ளார்கள். சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோனை திருப்பி தர முடியாது என இந்து சமய அறநிலைத்துறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்டியலில் வெடிகுண்டை தூக்கிப் போட்டு இருந்தால் என்ன செய்திருப்பார்கள்?.

பேட்டியளிக்கும் சீமான்

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள த.வெ.க கட்சி காரணமாகவே நீங்கள் ஆயிரம் இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வுகளை நடத்துகிறீர்களா? என்று கேட்கிறீர்கள். ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி. அவரை இதில் இழுத்து விடாதீர்கள். ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள். தி.மு.க-தான் எனது எதிரி. இஸ்லாமியருடைய ஓட்டுகளை பொறுக்குவதற்காகவே நாங்கள் பாட்ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் யாருடைய ஓட்டை பொறுக்குவதற்காக கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்?. இஸ்லாமியர்கள் ஒருபோதும் எனக்கு வாக்களித்ததில்லை.. அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனக்கு உடன்பிறந்தார்கள் என்ற எண்ணத்திலேயே அவர்களுடன் உறவு பாராட்டுகிறேன். அவர்களுடைய ஐந்து கடமைகளில் ஆறாவது கடமையாக, தி.மு.க-வுக்கு வாக்களிப்பதையே தீர்மானமாக வைத்திருக்கின்றனர். அவர்களது இறைத்தூதரே வந்து சொன்னால் கூட அவர்கள் தி.மு.க-விற்கு வாக்கு செலுத்துவதை விட மாட்டார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம். தனித்து போட்டியிடுவோம். தி.மு.க சார்பில் அங்கு இடைத்தேர்தலில் பணியாற்றக்கூடிய செந்தில் பாலாஜியை பார்த்து நாங்கள் பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?. பணம் கொடுத்தால் தான் தி.மு.க-வினர் தேர்தல் வேலைகளை செய்வார்கள். அப்படி, இருக்கையில் நாங்கள் ஏன் அவரைப் பார்த்து பயப்பட வேண்டும்?” என்றார்.

தேர்தல் நடத்தை விதி திருத்தம்: ``ஜனநாயகத்தின் மீதான மற்றொரு தாக்குதல்" - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்!

Qவாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்திச் செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சிசிவிடி, வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று ... மேலும் பார்க்க

"பா.ஜ.க ஆயுதத்தை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எங்களுக்கு கவலை கிடையாது" - சொல்கிறர் ரகுபதி

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில் வார்டு எண் 38, 39, 40, 41, 42 ஆகிய பகுதிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 25.31 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேரமும் ... மேலும் பார்க்க

DMK: "துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?" - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது..."2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத... மேலும் பார்க்க

DMK: 'பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல' - செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன?

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்..."கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் க... மேலும் பார்க்க

Udhayanidhi: "200 இடங்கள் அல்ல... 200-க்கும் மேல் திமுக வெல்லும்" - உதயநிதி உறுதி

இன்று (டிசம்பர் 22) சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாவது..."இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் எந்தத் தேர்தலிலும் தோ... மேலும் பார்க்க

புதுவை: "மார்ட்டின் குழுமத்துக்கு அரசியல் அடித்தளம்" - ஜான்குமார் மீதான திமுக புகாரும், பாஜக பதிலும்

சமீபத்தில் வீசிய ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதையடுத்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவ... மேலும் பார்க்க