செய்திகள் :

"பா.ஜ.க ஆயுதத்தை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எங்களுக்கு கவலை கிடையாது" - சொல்கிறர் ரகுபதி

post image
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில் வார்டு எண் 38, 39, 40, 41, 42 ஆகிய பகுதிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 25.31 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

‘ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது. யாராவது இறுதி ஊர்வலத்தில் அதிக அளவு கூட்டம் இருந்தால் அங்கு காவல்துறையினர் இருக்க வேண்டியது அவசியம் தான். அதேபோல், பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் பாதுகாப்பு போடுவது அவசியம் தான். அதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. அவர் சிறையில் இருந்து விடுவித்த பிறகு தான் உயிரிழந்துள்ளார். அதனால், இதில் அரசு எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. அந்த ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் அதிகப்படியான நபர்கள் சென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. சமூக விரோதிகளுக்கும் பல்வேறு வழக்குகளில் சிக்கி இருக்கின்றவர்களுக்கும் கேடிகள் பட்டியலில், ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களுக்கும் பதவிகளை கொடுப்பதும், கட்சிகளில் சேர்த்துக் கொள்வதும் அகில இந்திய அளவில் பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த கட்சியும் செய்வது இல்லை. இதற்கு ஏற்கனவே பலமுறை ஆதாரத்தோடு பெயர் பட்டியலோடு நிரூபித்து இருக்கின்றோம். வேண்டுமென்றால் மீண்டும் ஒரு பெயர் பட்டியலை தர தயாராக இருக்கின்றோம். தி.மு.க-வில் தெரிந்து நாங்கள் செய்வது கிடையாது. தெரியாமல் எங்கேயாவது நடந்திருந்தால் உடனடியாக கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்படுவார்கள். பா.ஜ.க ஆயுதத்தை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எங்களுக்கு கவலை கிடையாது. அவர்கள் எப்போதும் ஆயுதத்தை கையில் வைத்துள்ளவர்கள் என்பது நாடறிந்த உண்மை. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை.

பாஜக

தி.மு.க-வை பொறுத்தவரை நாங்கள் அமைதி வழியில் செல்ல தான் விரும்புகிறோம். மக்களைச் சந்தித்து மக்களுக்கான ஆட்சியைத் தருவது தான் எங்கள் தலைவரின் விருப்பம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி இந்தியாவுக்கே பொதுவான அம்பேத்கரை பற்றி அமித்ஷா கூறியதைப் பற்றி கேட்டால் ஜெயக்குமார் பேசிய கருத்துதான் எனது கருத்து என்று கூறுகிறார். அப்படி, கூறுவதற்கு பொதுச்செயலாளர் பதவி எதற்கு?. பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் அவருக்குப் பிடித்தபடி செய்ய வேண்டும் என்று கூறினால், அதற்கு நாங்கள் ஆள் கிடையாது. நாங்கள் சட்டப்படி செய்கிறோம். சட்டப்படி அது இல்லை என்றால் யார் வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம். ஆளுநரை மாற்றக்கூடிய முடிவை நாங்கள் எடுக்க முடியாது. நாங்கள் ஆளுநரை மாற்ற கூறினால் இன்னும் பலமாக அவர் இங்கு உட்கார்ந்து கொள்வார். நாங்கள் ஆளுநரை மாற்றச் சொல்லும் கோரிக்கையை வைக்க மாட்டோம். ஆளுநரோடு வார்த்தை மோதல் இருப்பது இயற்கை. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் என்ன கருத்துக்களை வேண்டுமென்றாலும் கூறலாம். அதில் ஏதும் தவறு கிடையாது. நாங்கள் ஆளுநர் மாறிவிட்டார் என்று நினைக்கவில்லை. அவர் வைத்த தேநீர் விருந்தில் அரசு சார்பில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு வந்ததன் பெயரில் ஒரு சில அமைச்சர்களோடு அதில் கலந்து கொண்டோம். சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரின் கடந்த கால செயல்பாடு படி தற்போது இருக்காது என்று எண்ணுகின்றோம். அப்படி இருந்தால் பின் விளைவுகளைப் பற்றி அப்போதும் பேட்டி கொடுப்போம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

திருநெல்வேலி சம்பவம் போன்று எந்த சம்பவமும் நடக்காமல் தடுக்க முடியாது. ஆனால், சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே இரண்டு குற்றவாளிகளும் மேலும் திருநெல்வேலி கொலை வழக்கில் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்துறை விரைந்து செயல்பட்டு நான்கு குற்றவாளிகளைக் கைது செய்து இருக்கிறார்கள் என்றால் காவல்துறையை பாராட்ட வேண்டுமே தவிர, அங்கு சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?. எதிர்பார்க்காமல் நடப்பது தான் தற்போது இந்த இடத்திலேயே யாரேனும் ஒருவர் அரிவாளுடன் வந்து இன்னொருவரை வெட்டப் போகிறீர்கள் என்று நினைக்க முடியுமா?. அப்படி சம்பவம் நடந்தால் அமைச்சர் முன்னிலையில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது என்று அடுத்த நிமிடமே செய்தி வரும். அதனால் இதை யாரும் எதிர்பார்க்க முடியாது. கூட்டத்துக்குள் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். ஆனால், அது நடந்தவுடன் தடுக்கக்கூடிய சக்தி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தடுக்கக்கூடிய சக்தி தி.மு.க ஆட்சிக்கு இருக்கிறது. நாங்கள் தடுக்கின்றோம். நீதிமன்ற‌ வளாகம் என்றால் இதுவா?. நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தான் நடந்துள்ளது.

வெளியே நடக்கும் சம்பவத்திற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?. உடனடியாக குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளோம். அதை பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு மனமில்லாமல் இங்கு சட்ட ஒழுங்கு சரி இல்லை கெட்டுவிட்டது என்று தொடர்ந்து அதே பல்லவியை பாடுவதை தான் கேட்டுக்கொண்டு இருக்கிறோமே தவிர எங்களை பாராட்டுவதற்கு மனமில்லை. ஆனால், நாங்கள் வேண்டுமென்று எதுவும் செய்யவில்லை.

பேட்டியளிக்கும் ரகுபதி

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தூத்துக்குடியில் நடந்த மரணம் எல்லாம் அனைவருக்கும் தெரியும். காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டது எல்லாம் அனைவருக்கும் தெரியும். அந்த மாதிரியான சம்பவம் தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுள்ளதா?. எங்களுடைய முதலமைச்சர் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு கட்சி போட்டிதான் இருக்கும். திராவிட கட்சிகளுக்கு தான் தமிழ்நாட்டில் மரியாதை உண்டு அதிலும் தி.மு.க-வுக்கு தான் அதிகம் மரியாதை உண்டு. அதேநேரம், அனைத்து கட்சிகளுக்கும் மரியாதை உண்டு. நான் எந்த கட்சிக்கும் மரியாதை இல்லை என்று கூறவில்லை. ஆனால், திராவிட கட்சிகளுக்கு கூடுதலாக இருக்கிறது என்று தான் கூறுகிறேன். எதிர்க்கட்சிகள் சிதறி கிடப்பது எங்களுக்கு வலிமை தான். ஆனால், ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று வர வேண்டும் என்றுதான் எங்கள் தலைவர் விரும்புவார். தகுதியே இல்லாத ஆட்களோடு போட்டிபோட விரும்ப மாட்டார். என்றைக்கும் ஆரோக்கியமான போட்டிதான் அவருக்கு பிடிக்கும். அதில் வெற்றி அடைந்து வரக்கூடியவர் தான் எங்கள் தலைவர். டி.டி.வி தினகரன் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு வந்தால் தான் கட்சி அழியாமல் இருக்கும் என்று கூறிய விவகாரத்தில் அது அ.தி.மு.க-வுக்கு எச்சரிக்கையாகவும், பயமுடுத்துவதற்காகவும் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான் காட்டம்

திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் , ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ப... மேலும் பார்க்க

தேர்தல் நடத்தை விதி திருத்தம்: ``ஜனநாயகத்தின் மீதான மற்றொரு தாக்குதல்" - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்!

Qவாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்திச் செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சிசிவிடி, வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று ... மேலும் பார்க்க

DMK: "துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?" - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது..."2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத... மேலும் பார்க்க

DMK: 'பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல' - செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன?

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்..."கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் க... மேலும் பார்க்க

Udhayanidhi: "200 இடங்கள் அல்ல... 200-க்கும் மேல் திமுக வெல்லும்" - உதயநிதி உறுதி

இன்று (டிசம்பர் 22) சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாவது..."இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் எந்தத் தேர்தலிலும் தோ... மேலும் பார்க்க

புதுவை: "மார்ட்டின் குழுமத்துக்கு அரசியல் அடித்தளம்" - ஜான்குமார் மீதான திமுக புகாரும், பாஜக பதிலும்

சமீபத்தில் வீசிய ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதையடுத்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவ... மேலும் பார்க்க