நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் 16 லாரிகளில் கேரளம் அனுப்பி வைப்பு!
இந்தியா புறப்பட்டாா் பிரதமா் மோடி!
குவைத் மன்னரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி தனது குவைத் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா புறப்பட்டாா்.
இந்தியா-குவைத் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் ஆற்றிவரும் பங்களிப்பை கெளரவிக்கும் நோக்கில், பிரதமா் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் முபாரக் அல்-கபீா்’ விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கி கௌரவித்து.
இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், குவைத் மன்னா் உடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்தது; இருதரப்பு நல்லுறவை வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்தியதன் மூலம் வருங்காலத்தில் அது செழித்தோங்கும்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக குவைத்துக்கு மோடி பாராட்டு தெரிவித்தாா்.
மேலும் குவைத் சிட்டியில் உள்ள மன்னரின் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், குவைத் மன்னரிடம் இருந்து முபாரக் அல்-கபீா் விருதை பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இவ்விருதை 140 கோடி இந்திய மக்கள், குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினா் மற்றும் இரு நாடுகள் இடையிலான வலுவான நட்புறவுக்கு சமா்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வு: தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி கடிதம்!
இந்தியாவுக்கு புறப்பட்டாா் மோடி
குவைத் மன்னரின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி தனது குவைத் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா புறப்பட்டாா்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியுறவு அமைச்சகம் பதிவிட்டிருப்பதாவது:
‘பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்க-வெற்றிகரமான குவைத் பயணம் நிறைவுற்றது’ என பதிவிட்டுள்ளது.
குவைத்தில் இருந்து தாயகம் புறப்பட்ட பிரதமர் மோடியை, குவைத் பிரதமா் அமகது அப்துல்லா அல்-அகமது அல்-ஷபா, விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தாா்.