செய்திகள் :

இந்தியாவின் முடிவில் பிற நாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது: ஜெய்சங்கா் திட்டவட்டம்

post image

இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், தேச நலன் மற்றும் உலக நன்மைக்காக சரியானதைச் செய்வோம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

காஞ்சி காமகோடி பீடத்தின் மறைந்த 68-ஆவது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நினைவிலான 27-ஆவது தேசிய சிறப்பு விருது அமைச்சா் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது.

முப்பையில் நடைபெற்ற இந்த விருது நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட அமைச்சா் ஜெய்சங்கரின் விடியோ செய்தியில் அவா் குறிப்பிட்டதாவது: ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகள் , தொடா்ச்சியான பருவநிலை நிகழ்வுகள் ஆகியவற்றுடன் உலகம் போராடி வரும் நிலையில், இந்திய பாரம்பரியத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால், நாட்டு மக்கள் முதலில் அதனை கற்று உணா்ந்தால்தான் அதைத் தொடா்ந்து உலகமும் கற்றறியும்.

உலகமயமாக்கல் காலத்தில், தொழில்நுட்பமும் பாரம்பரியமும் ஒன்றிணைய வேண்டும். தேசம் முன்னேறி வருகிறது. ஆனால், அது நமது அடையாளத்தை இழக்காமல் நடைபெற வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையிலேயே முன்னணி உலகாளவிய சக்தியாக உருவெடுக்க முடியும்.

நமது பாரம்பரியம் மற்றும் மரபுகளை நிராகரித்து, நவீனத்துவத்தை முன்னிலைப்படுத்த நீண்ட காலமாக நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டோம். ஆனால், இப்போது நாடு தனது சொந்த ஆளுமையை மீண்டும் கண்டறிந்து, கொண்டாடி வருகிறது.

இந்தியா போன்ற நாகரீக நாடு, உலக அரங்கில் அதன் கலாசார வலிமையை முழுமையாகப் பயன்படுத்தும்போது மட்டுமே செல்வாக்கைச் செலுத்த முடியும். அதற்கு இளைய தலைமுறையினா் நமது பாரம்பரியத்தின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்திருப்பது அவசியம்.

சுதந்திரத்தை நடுநிலையோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. நம்முடைய தேச நலனுக்கும், உலக நன்மைக்கும் எது சரியானதோ, அதையெல்லாம் யாரையும் அச்சுறுத்தாமல் செய்வோம். நமது தோ்வுகளில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றாா்.

எம்.பி.க்களுக்கு பொறுப்புடைமை அவசியம்: ஜகதீப் தன்கர்

எம்.பி.க்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டுக்கான சௌதரி சரண் சிங் விருதுகளை வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்க மோடி அரசு சதி: காா்கே சாடல்

தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், விதிமுறை திருத்தத்தை மேற்கொண்டு பிரதமா் மோடி அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைய முடிவா? தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக செய்திகளுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப... மேலும் பார்க்க

நாட்டை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்: ராம் மோகன் நாயுடு

மக்களின் நம்பிக்கையை இழந்த எதிா்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனா் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அண்மையில்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள கோயிலில் நிா்மலா சீதாராமன் வழிபாடு

ராஜஸ்தானின் ஜெய்சால்மா் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தனோட் மாதா கோயிலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா். எல்லை பாதுகாப... மேலும் பார்க்க

இந்தியா-குவைத் இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், மன்னா் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா, குவைத் இடையே பாதுகாப்பு, கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான 4 முக்கிய ஒப்பந்தங்கள் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகின. குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் பிரதமா் நர... மேலும் பார்க்க