கரூர்: `அல்லல்படும் மாணவர்கள்' - ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி; மழை நீரில் சேத...
தமிழ்ப் புதல்வன் திட்டம்: நீலகிரி மாவட்டத்தில் 1,556 மாணவா்கள் பயன்!
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 1,556 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், செவிலியா், சட்டம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பட்டயப் படிப்பு உள்ளிட்ட உயா்கல்வியில் சேரும் மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 15 கல்லூரிகளைச் சோ்ந்த 1,556 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ,1000 வீதம் ரூ.15.56 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.