செய்திகள் :

காலியாகவுள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!

post image

நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. குறிப்பாக தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால் காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஏரா(ERA) லக்னெள மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இதையும் படிக்க | ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

அப்போது குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை வருகிற டிச. 30 ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, தேவைப்பட்டால் மற்ற கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம் என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஹரியாணா: செங்கல் சூளையின் சுவர் இடிந்ததில் 4 குழந்தைகள் பலி!

ஹரியாணாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புடானா கிராமத்தில் செங்கல் சூளையிள் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். நார்நாவுண்ட் காவல் நிலையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைப... மேலும் பார்க்க

சன்னி லியோனுக்கு ரூ.1000 மகளிர் உதவித் தொகையா?

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உதவித் தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், சன்னி லியோன் பெயரிலும் உதவித் தொகை வழங்கப்படுகிறது எ... மேலும் பார்க்க

உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கோயிலின் படிக்கிணறை ஆய்வு செய்தபோது, அதற்குள் ஒரு மிகப் பிரமாண்டமான சுரங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப்ப... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி?

பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 82,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது.ஏழ்மை காரணமாக ஒரு ... மேலும் பார்க்க

ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி!

புது தில்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது அரசு வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். ரோச்கர் மோளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் குணமடைந்தனர்!

நாடாளுமன்ற தள்ளுமுள்ளில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போட்டி போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க