செய்திகள் :

``மோடி அழுத்தம்; பணிந்த தேர்தல் ஆணையம்'' -தேர்தல் நடத்தை விதி திருத்தத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு

post image

மத்திய சட்ட அமைச்சகமானது கடந்த வெள்ளியன்று, தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ல் திடீர் திருத்தம் மேற்கொண்டது. தேர்தல் `தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்குக் கிடைக்கும்.' என்பதை, `வேட்புமனு படிவங்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், தேர்தல் கணக்கு அறிக்கைகள் மட்டுமே பொது ஆய்வுக்குக் கிடைக்கும் ஆவணங்கள்.' என்று மத்திய அரசு திருத்தியிருக்கிறது.

அதன்படி இனிமேல், சிசிடிவி காட்சிகள், வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் போன்ற மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்குக் கிடைக்காது.

பா.ஜ.க - தேர்தல் ஆணையம்

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-ல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.

குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் ஹரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது. தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான - நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின்

நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்." என்று எக்ஸ் தளத்தில் தனது எதிர்ப்பைப் பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

கரூர்: ``இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பிறகும் சீரழியுறோம்!” - சுடுகாடு கேட்டு போராடும் மக்கள்

"இருக்கும்போதுதான் எங்களுக்கு மதிப்பில்லை. இறந்த பிறகாவது எங்களுக்கு பிரச்னை இருக்காது என்று நினைத்தால், சுடுகாட்டுப் பிரச்னையில் சீரழியுறோம்” என்று கண்ணீர் வடிக்கிறார்கள் கரூர் மாவட்டம், மண்மங்கலம் த... மேலும் பார்க்க

PM Modi: ``அரபு மொழியில் ராமாயணம், மகாபாரதம்...'' - மகிழ்ச்சியை பகிர்ந்த மோடி

'அரபு மொழியில் ராமயணம் மற்றும் மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பை பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த மொழிபெயர்ப்பு உலக அளவில் இந்திய கலாச்சாரத்தின் புகழை பறைசாற்றுகிறது' என்று கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி தனது எக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: மலம் கழிக்கும்போது ரத்தம்... புற்றுநோய் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என்கணவருக்கு மாதத்தில் பல நாள்கள்வயிற்றுக்கோளாறுகள் இருப்பதாகச் சொல்கிறார். பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு என ஏதேனும் ஒரு பிரச்னை மாறி மாறி வருகிறது. அவருக்கு சிகரெட் பழக்கம... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதில் artificial sweeteners சாப்பிடலாமா?

Doctor Vikatan: என்அம்மாவுக்கு பத்து வருடங்களாக சர்க்கரைநோய்இருக்கிறது. அவரால் இனிப்பு சாப்பிடுவதைக்கட்டுப்படுத்த முடியாது. எனவே, காபி, டீ போன்றவற்றுக்கு வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் வெல்லம், நாட்டுச்ச... மேலும் பார்க்க

குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்!

காலையில் மழை பெய்கிறது, இரவில் பனிக் கொட்டுகிறது. தற்போதைய பருவ நிலையே புரியாத புதிராக இருக்கிறது. விளைவு, நம் வீட்டுக் குழந்தைகள் சிந்திய மூக்கும் 'ஹச்' தும்மலுமாக இருக்கிறார்கள். இதோடு, இந்தக் குளிர... மேலும் பார்க்க

மஸ்ஜித் - கோயில் விவகாரம்: ``இந்துக்களின் தலைவராகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்" - மோகன் பகவத்

"விஸ்வகுரு பாரத்" கருப்பொருளில் விரிவுரைத் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, ``சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனி... மேலும் பார்க்க