செய்திகள் :

Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதில் artificial sweeteners சாப்பிடலாமா?

post image

Doctor Vikatan: என் அம்மாவுக்கு பத்து வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. அவரால் இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, காபி, டீ போன்றவற்றுக்கு வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக்கொள்வார். அதேபோல கேசரி, சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றில் எல்லாம் செயற்கை இனிப்பூட்டி சேர்த்துச் செய்து சாப்பிடுகிறார். சர்க்கரை நோயாளிகள்  artificial sweeteners அல்லது வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை எடுத்துக்கொள்வது சரியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். 

ஷைனி சுரேந்திரன்

செயற்கை இனிப்பூட்டிகள் என்பவை நீரிழிவு நோயாளிகளைக் குறிவைத்தே மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. பல வருடங்களாக இனிப்பு சாப்பிட்டுப் பழகியவர்களை, சர்க்கரை நோய் வந்துவிட்டதால், திடீரென இனிமேல் இனிப்பே சாப்பிடக்கூடாது என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள ரொம்பவே போராடுவார்கள். இனிப்பு இல்லாமல் எதையுமே சாப்பிட முடியாது என்று சொல்லும் பலரைப் பார்க்கலாம்.

நீரிழிவு பாதித்தவர்கள், செயற்கை இனிப்பூட்டிகளை (artificial sweeteners) எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை. அதாவது அவர்கள் தினமும் குடிக்கும் காபி, டீ போன்றவற்றில் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பாயசம் போன்றவற்றில் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், வெள்ளைச் சர்க்கரை சேர்த்துச் செய்கிற எல்லா உணவுகளிலும் இதைச் சேர்த்துச் சாப்பிடலாம் போல... அது ஆரோக்கியமானது என நினைத்துக்கொள்வது மிகவும் தவறு. அதாவது கலோரி அதிகமான மாவு, நெய், எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றோடு செயற்கை இனிப்பூட்டிகளையும் சேர்த்துச் செய்து சாப்பிடும்போது நிச்சயம் அது பக்க விளைவுகளையே காட்டும். செயற்கை இனிப்பூட்டியோடு, அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் எல்லாம் சேரும்போது அது ரத்தச் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவுகளை நிச்சயம் அதிகரிக்கும்.

எனவே, ஒருநாளைக்கு ஒன்று அல்லது இருமுறை காபி, டீ போன்றவற்றில் செயற்கை இனிப்பூட்டிகளைச் சேர்த்துக்கொள்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளைச் சர்க்கரைதான் கேடு... வெல்லமோ, கருப்பட்டியோ, தேனோ ஆரோக்கியமானது என நினைத்துக்கொண்டு பலரும் அவற்றுக்கு மாறுவதைப் பார்க்கிறோம். வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தும்போது நமக்கு அளவு தெரியும்.  ஆனால், தேன், வெல்லம் போன்றவற்றுக்கு மாறும்போது, வெள்ளைச் சர்க்கரையின் அதே இனிப்புச் சுவையை மேட்ச் செய்ய வேண்டும் என எதிர்பார்த்து, அளவுக்கு அதிகமாக அவற்றைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.

எனவே, முதல் முயற்சியாக வெள்ளைச் சர்க்கரையின் அளவைக் குறைக்கப் பாருங்கள். அரை இனிப்பு, கால் இனிப்புக்குப் பழகிய பிறகு, நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம் போன்றவற்றுக்கு மாறினால், அவற்றை அதிகம் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்!

காலையில் மழை பெய்கிறது, இரவில் பனிக் கொட்டுகிறது. தற்போதைய பருவ நிலையே புரியாத புதிராக இருக்கிறது. விளைவு, நம் வீட்டுக் குழந்தைகள் சிந்திய மூக்கும் 'ஹச்' தும்மலுமாக இருக்கிறார்கள். இதோடு, இந்தக் குளிர... மேலும் பார்க்க

மஸ்ஜித் - கோயில் விவகாரம்: ``இந்துக்களின் தலைவராகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்" - மோகன் பகவத்

"விஸ்வகுரு பாரத்" கருப்பொருளில் விரிவுரைத் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, ``சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனி... மேலும் பார்க்க

Mumbai: ``மத கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பான வீடு..'' - போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த 23 வயது இளைஞர் அதே வயதுடைய மாற்றுமத பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் 2019-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக படித்தபோது காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது உறவுக்கு பெற்றோர்... மேலும் பார்க்க

Karnataka: ``பெண் அமைச்சரிடம் தகாத வார்த்தை.." - பாஜக நிர்வாகி சி.டி.ரவி கைது

நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கர்நாடக... மேலும் பார்க்க

Doctor Vikatan: காதிலிருந்து வரும் சத்தம்... Ear phone பயன்பாடுதான் காரணமா?

Doctor Vikatan: என் மகனுக்கு வயது 25. அவனுக்கு கடந்த சில தினங்களாக காது அடைத்துக்கொண்டதாகச் சொல்கிறான். காதிலிருந்து சத்தம் வருவதாகவும் சொல்கிறான். மருந்துக் கடையில் காதுகளைச் சுத்தப்படுத்தும் டிராப்ஸ... மேலும் பார்க்க

``என் பெயரை ஏன் சொல்லவில்லை?'' - அமித் ஷா கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மோதல்!

அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற ஊர்களில் காலை ஆர்ப்பாட்டம்... மேலும் பார்க்க