செய்திகள் :

குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்!

post image

காலையில் மழை பெய்கிறது, இரவில் பனிக் கொட்டுகிறது. தற்போதைய பருவ நிலையே புரியாத புதிராக இருக்கிறது. விளைவு, நம் வீட்டுக் குழந்தைகள் சிந்திய மூக்கும் 'ஹச்' தும்மலுமாக இருக்கிறார்கள். இதோடு, இந்தக் குளிர்காலத்தில் சாப்பிடக் கூடாத உணவுகளைச் சாப்பிட்டுவிட்டால் குழந்தைகள் செரிமானக் கோளாறு, நெஞ்சில் கபம் என்று இன்னும் கஷ்டப்பட்டு விடுவார்கள். அதனால், குளிர்காலங்களில் ஒன்று முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட கொடுக்க வேண்டும்; என்னென்ன உணவுகளை சாப்பிடக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

குழந்தைகள்

* எந்த சீசனிலுமே ஃபிரிட்ஜில் வைத்த பழைய உணவுகளைக் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கக்கூடாது. அதிலும் குளிர்காலம் என்றால் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. காலையில் செய்த தேங்காய் சட்னி, மதியம் வைத்த சாம்பார் இரண்டையும் ஃபிரிட்ஜில் வைத்து இரவு டிபனுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களின் நெஞ்சில் சளிதான் பிடிக்கும்.

புளிக்குழம்பும் மீன் குழம்பும் ஊற ஊறத்தான் ருசி என்று பழையக் குழம்புகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களுக்கு உங்கள் வீட்டில் தடையுத்தரவு போடுங்கள். பழங்களைப் பிழிந்து சாறாக குழந்தைகளுக்குக் கொடுத்தாலும், அதிலும் ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கொடுக்காதீர்கள். அதற்குப் பதில் பழங்களைக் கடித்து சாப்பிடச் சொல்லுங்கள். வைட்டமின் மற்றும் தாது உப்புக்களுடன், நார்ச்சத்தும் கிடைக்கும். இதனால், குளிர் காலங்களில் வருகிற செரிமானக் கோளாறும் பிள்ளைகளுக்கு வராது.

சில வீடுகளில் இரவில் மோர் சாதம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அந்தப் பழக்கத்தை குளிர்காலங்களில் மட்டும் தள்ளி வையுங்கள்.

food

தினசரி காலை, மாலை அல்லது இரவில் பால் குடிக்கிற பழக்கம் உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், பாலில் குழம்பு மஞ்சள்தூள் (கடையில் வாங்கிய பாக்கெட் மஞ்சள் தூள் வேண்டாம்) ஒரு சிட்டிகை, வீட்டிலேயே அரைத்த மிளகுத் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து பிள்ளைகளுக்கு குடிக்கக் கொடுங்கள். ஏனென்றால், பால் குழந்தைகளின் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்துகிற தன்மை கொண்டது. அதனால்தான் மஞ்சளும் மிளகும் சேர்க்கச் சொல்கிறேன்.

குளிர்காலங்களில் புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நீர்க்காய்கறிகளை பிள்ளைகளின் உணவில் சேர்க்காதீர்கள்.

கீரைகள் நல்லதுதான். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்ல, எல்லா சீசனிலும் பகலில் மட்டும்தான் கீரைகளை சாப்பிட வேண்டும்.

பேக் செய்து வருகிற ஊட்டச்சத்து பானங்களும் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றையும் இந்த ஜில் சீசனில் தவிர்த்து விடுங்கள். அதற்குப்பதில், சத்துமாவுடன் வெல்லம், சிறிதளவு சுக்குப்பொடி சேர்த்து கஞ்சியாக காய்ச்சிக் கொடுங்கள்.

இரவில் மோர் மற்றும் கீரைப் போலவே, தயிரையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. 'இரவில் தயிர் சாப்பிட்டு என் பிள்ளைக்கு பழக்கம்' என்பவர்கள், உங்களுக்கே தெரியாமல் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறு, சைனஸ் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

விக்ரம் குமார்

சைவத்தில் தூதுவளை சட்னி, கற்பூரவல்லி சட்னி, கொள்ளு ரசம் , கொள்ளு சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை கண்டிப்பாகக் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள்.

அசைவத்தில் நாட்டுக்கோழி ரசம், ஆட்டுக்கால் சூப், நண்டு போன்றவை சாப்பிடலாம். இறால், உடலுக்கு மந்தம் தரக்கூடிய அசைவ உணவு என்றாலும் தசைக்கு வலிமை தரக்கூடியது, மீன் உணவுகளும் ஓகே தான். ஆனால், குளிர்காலத்தில் அசைவ உணவுகளை பகலில் மட்டும்தான் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். சாப்பிட வேண்டியவற்றில் நான் சொல்லியிருக்கிற உணவுகள் எல்லாம் குளிர்காலத்தில் குழந்தைகளின் உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தந்து, சளிப் பிரச்னை இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

மஸ்ஜித் - கோயில் விவகாரம்: ``இந்துக்களின் தலைவராகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்" - மோகன் பகவத்

"விஸ்வகுரு பாரத்" கருப்பொருளில் விரிவுரைத் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, ``சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனி... மேலும் பார்க்க

Mumbai: ``மத கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பான வீடு..'' - போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த 23 வயது இளைஞர் அதே வயதுடைய மாற்றுமத பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் 2019-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக படித்தபோது காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது உறவுக்கு பெற்றோர்... மேலும் பார்க்க

Karnataka: ``பெண் அமைச்சரிடம் தகாத வார்த்தை.." - பாஜக நிர்வாகி சி.டி.ரவி கைது

நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கர்நாடக... மேலும் பார்க்க

Doctor Vikatan: காதிலிருந்து வரும் சத்தம்... Ear phone பயன்பாடுதான் காரணமா?

Doctor Vikatan: என் மகனுக்கு வயது 25. அவனுக்கு கடந்த சில தினங்களாக காது அடைத்துக்கொண்டதாகச் சொல்கிறான். காதிலிருந்து சத்தம் வருவதாகவும் சொல்கிறான். மருந்துக் கடையில் காதுகளைச் சுத்தப்படுத்தும் டிராப்ஸ... மேலும் பார்க்க

``என் பெயரை ஏன் சொல்லவில்லை?'' - அமித் ஷா கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மோதல்!

அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற ஊர்களில் காலை ஆர்ப்பாட்டம்... மேலும் பார்க்க

Mumbai: காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்; தடியடி நடத்தி விரட்டியடிப்பு -என்ன நடந்தது?

மத்திய அமைச்சர் அமித் ஷா பாபாசாஹேப் அம்பேத்கருக்கு எதிராக பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்காக ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் வழக்குப்பத... மேலும் பார்க்க