செய்திகள் :

அரிசி தேடி வீடுகளுக்குள் நுழையும் யானை; வனத்துக்குள் விரட்ட கும்கிகளுடன் களமிறங்கிய வனத்துறை!

post image

அரிசி சுவைக்கு பழக்கப்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழங்குடிகள் மற்றும் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளில் அரிசி தேடி நடமாடி வருகிறது. நள்ளிரவில் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் அந்த யானை, மிகவும் பலவீனமாக கட்டி கொடுக்கப்பட்டிருக்கும் தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளின் கதவு, ஜன்னல் ஓடுகளை சேதப்படுத்தி உள்ளே நுழைந்து அரிசியை உட்கொண்டுச் செல்கிறது. கடந்த சில நாட்களில் 15 - ற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்தியிருக்கிறது.

சேதமடைந்த வீடுகள்

தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென வீட்டை சேதப்படுத்தி உணவு பொருட்களை எடுத்துச் செல்லும் யானையிடம் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் உயிர் தப்பி வருகின்றனர். நாள்தோறும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும் குறிப்பிட்ட யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி வனத்துறைக்கு மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணிக்கு தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதுடன், 2 கும்கி யானைகளும் முதுமலை, தெப்பக்காடு முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "குறிப்பிட்ட அந்த ஆண் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் கூடலூர் வனக்கோட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன் களப்பணியாளர்களும், அதிவிரைவுப்படை, யானை விரட்டும் காவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் என சுமார் 75 பணியாளர்கள் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் சிறப்பு குழு சேரம்பாடி பகுதியில் முகாமிட்டுள்ளது.

சேதமடைந்த வீடுகள்

ட்ரோன் கேமரா மூலமும் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற யானை விரட்டும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, யானையை விரட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது" என்றனர்.

Tiger : முதுமலை காட்டில் இறந்து கிடந்த புலி - கள ஆய்வில் இறங்கிய வனத்துறை!

வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் காடுகளில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம். பந்திப்பூர், முத்தங்கா சத்தியமங்கலம் உள்ளிட்ட வளம் நிறைந்த வனங்களும் முதுமலை... மேலும் பார்க்க

Antarctica: உலகின் மிகப் பெரிய பனிப்பாறை A23a நகரத் தொடங்கியது - இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

உலகின் மிகப் பெரிய மற்றும் பழைமையான பனிப்பாறைக்கு A23a என்று பெயர். நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் இருந்த இந்த பனிப்பாறை மீண்டும் நகரத் தொடங்கியிருக்கிறது.முதன்முதலாக 1980களில் உலகின் மிகப் பெரிய பனிப... மேலும் பார்க்க

எட்டிப் பார்த்த ஒற்றைக் கொம்பன்; காத்திருந்த மராபூ நாரை - காசிரங்கா தேசியப் பூங்கா | Photo Album

காசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்க... மேலும் பார்க்க

அடுத்தடுத்து தகர்க்கப்படும் குடியிருப்புகள்; நள்ளிரவில் அலறும் மக்கள் - என்ன நடக்கிறது பந்தலூரில்?

நீலகிரி காடுகளில் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தனியார் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனிதர... மேலும் பார்க்க

நெல்லை கனமழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு... நிரம்பி வழியும் மருதூர் அணைக்கட்டு! - Photo Album

நெல்லை கனமழை வெள்ளம்: நிரம்பி வழியும் தாமிரபரணி ஆறு மருதூர் அணைக்கட்டு.! மேலும் பார்க்க