காட்சிப்படுத்தப்பட்ட பெண் புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள்! - Chennai photo bie...
அணியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியளிக்கிறது..! மனமுடைந்த ஆஸி. இளம் வீரர்!
பார்டர் - கவாஸ்கர் தொடரில் அறிமுகமான ஆஸ்திரேலிய இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி தொடரிலிருந்து தான் நீக்கப்பட்டதுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிஜிடி தொடரில் அறிமுகமான 25 வயதான நாதன் மெக்ஸ்வீனி 6 இன்னிங்ஸில் 72 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். இதனால் மீதமுள்ள 2 போட்டிகளில் அவருக்குப் பதிலாக 19 வயதாகும் சாம் கொன்ஸ்டாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
4 முறை பும்ராவிடம் ஆட்டமிழந்தார். முதல்தர கிரிக்கெட்டில் நடுவரிசையில் விளையாடிய அவர் தொடக்க வீரராக களமிறங்கினார்.
தொடக்க வீரர் கவாஜவை விட மெக்ஸ்வீனி சிறப்பாகவே விளையாடினார். இரண்டாவது டெஸ்ட் வெற்றிபெற மெக்ஸ்வீனி - லபுஷேன் பார்ட்னர்ஷிப் திருப்பு முனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் மனமுடைந்த இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி பேசியதாவது:
அதிர்ச்சியளிக்கிறது, ஆனால்...
ஆமாம், அணியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. கனவு நனவானதுபோல் இருந்தது. ஆனால், நான் நினைத்ததுபோல் நடக்கவில்லை. ஆனால், இது போட்டியில் ஒரு அங்கம். நான் எனது தலையை குணிந்து வலைப் பயிற்சியில் கவனம் செலுத்தப்போகிறேன்.
கடினமாக உழைத்து அடுத்த வாய்ப்புக்காக தயாராகவிருக்கிறேன்.
மீண்டும் வருவேன்
நாம் நினைத்ததுபோல் விளையாடாவிட்டால் நமது இடம் பாதுகாப்பானது இல்லை. எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறிவிட்டேன். ஆனால், முன்பே கூறியதுபோல கடினமாக உழைத்து அடுத்துவரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவேன்.
ஆஸி தேர்வுக்குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி, “இது கடினமான முடிவு. குறைவான போட்டிகளில் அவரை மதிப்பிட முடியாது. ஆனால், அவரும் நினைத்ததுபோல் விளையாடவில்லை. மெக்ஸ்வீனிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.