அமித் ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது: கர்நாடக அமைச்சர் விமர்சனம்!
கோயில் உண்டியலில் விழுந்த IPhone; மீண்டும் வழங்கப்படுமா? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோயில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு அண்மையில் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். அப்போது, தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி இருக்கிறார். அப்போது தவறுதலாக தினேஷின் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐஃபோன் உண்டியலில் விழுந்துள்ளது.
ஃபோனை கேட்ட தினேஷிடம் கோயில் நிர்வாகம் கோயில் உண்டியலில் விழுந்த அனைத்துப் பொருட்களும் முருகனுக்குச் சொந்தமானது எனக் கூறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக தினேஷ் சென்னை இந்து சமய அறநிலையத்துறையில் மனு அளித்திருக்கிறார்.
அவர் கொடுத்த அந்த மனுவின் அடிப்படையில், அதற்கான விசாரணை சரியாக நடத்தப்பட்டு செல்போனை ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனக் கூறி அவரை அனுப்பி வைத்திருகின்றனர். இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த சேகர் பாபு, "நானும் இன்றைக்கு அந்த செய்தியைப் பார்த்தேன். அது குறித்து தீர விசாரித்த பிறகு முடிவுகள் எடுக்கப்படும். எப்போதும் உண்டியலில் விழுந்துவிட்டால் சாமி கணக்கில்தான் எடுத்துக்கொள்வார்கள். இதற்கு எதுவும் விதிவிலக்கு இருக்கிறதா? என்று சட்டப்படி ஆராய்ந்து அதற்கான நிவாரணம் வழங்கப்படும் என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சாத்தியக்கூறுகள் இருந்தால் பக்தருக்கு ஐஃபோன் திரும்பி நிச்சயமாக வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.