செய்திகள் :

மகாகாளேஷ்வர் கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி!

post image

மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜைனி நகரில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் உருளைக்கிழங்கு உரித்தல் இயந்திரத்தில் பெண்ணின் துப்பட்டா சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாகாளேஷ்வர் கோயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கோயிலின் அன்னதானக் கூடம் அமைந்துள்ளது. இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றது. கோயில் நிர்வாகத்தினர் வெளியாள்களை வைத்து உணவு தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை கோயிலின் உணவுக்கூடத்தில் பணிபுரியும் ஊழியர்களுள் ஒருவரான ரஜினி காத்ரி(30) என்ற பெண்ணின் துப்பட்டா உருளைக்கிழங்கு உரிக்கும் இயந்திரத்தில் சிக்கியது. இதில் துப்பட்டா கழுத்தை இறுக்கி உயிருக்குப் போராடிய நிலையில் பெண் மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அந்த இயந்திரத்தை நிறுத்தினார்கள். பின்னர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இறந்த பெண் நகரின் கேசவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது. இவர் கோயிலின் உணவு கூடத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்று கூறினர்.

ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஜீன் தெரபிக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்ம... மேலும் பார்க்க

காவல்துறை அனுமதி மறுத்தும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: தெலங்கானா முதல்வர்

காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி எழுப்பிய கேள... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த முக்கியக் குற்றவாளி!

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி தன்னை நிரபராதி என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆக... மேலும் பார்க்க

மும்பை படகு விபத்து: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதிய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து மற்றொரு உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர் என்று பெரு... மேலும் பார்க்க

எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது: சி.டி.ரவி

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினா் சி.டி.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்ட... மேலும் பார்க்க

உத்தரகண்டில் பெரும் நிலச்சரிவு!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தார்ச்சுலா-தவாகாட்-லிபுலேக் சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. பித்தோராகரில் உள்ள தவாகாட் அருகே காலை 11 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக மாவட்ட நீதிபதி வினோத் கோஸ்வா... மேலும் பார்க்க