வேலூர்: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைது; கொதிக்கும் அண்ணாமலை; நட...
கடைசி ஒருநாள்: ஆப்கானிஸ்தானுக்கு 128 ரன்கள் இலக்கு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க:பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் நம்பிக்கை!
127 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதலில் விளையாடிய ஜிம்பாப்பே அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 30.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 61 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் காஸன்ஃபர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது மற்றும் அஸ்மதுல்லா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்; ரவீந்திர ஜடேஜா வலியுறுத்தல்!
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.