செய்திகள் :

அஸ்வினின் மனைவி எழுதிய இதயப்பூர்வமான புகழுரை..!

post image

இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் மனைவி பிரீத்தி நாராயணன் அஸ்வின் ஓய்வு குறித்து மிக நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் ரசிகையாக, மனைவியாக, கிரிக்கெட் ரசிகையாக அற்புதமாக அழுதியுள்ளார்.

2011இல் அஸ்வினுக்கும் பிரீத்தி அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

அஸ்வின் ஓய்வுக்கு அவரது மனைவி எழுதிய பதிவினை பலரும் பாராட்டி வருகிறார்கள். பிரீத்தி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

13-14 வருட நினைவுகள்

கடந்த இரண்டு நாள்களாக எனக்கு தெளிவற்றதாகவே இருந்தன. நான் என்ன சொல்வதென சிந்தித்துக்கொண்டிருந்தேன். நான் இதை எப்படி எழுதுவது? எனக்குப் பிடித்த சிறந்த கிரிக்கெட்டர் பற்றியா? அல்லது எனது கணவர் என்ற முறையிலா? அல்லது ரசிகையாக எழுதுவதா? இது இவையனைத்தும் கலந்த கலவையாக இருக்குமென நினைக்கிறேன்.

அஸ்வினின் மடிக்கணினியில் பார்த்தபோது சில சிறிய, பெரிய கணங்கள் இருந்தன. கடந்த 13-14 வருடங்களாக பல நினைவுகள் இருக்கின்றன. மிகப்பெரிய வெற்றி, தொடர் நாயகன் விருது, தீவிரமான போட்டிக்குப் பிறகு அமைதியாக இருக்கும் நமது அறைகள், சில நாள்களில் வழக்கத்தைவிட அதிகமான மாலைநேர குளியல், பென்சிலில் எதாவது எண்ணங்களை எழுதுவது, கிரிக்கெட் விடியோக்களை தொடர்ச்சியாக பார்த்து அதற்கேற்ப திட்டமிடுவது, ஓவ்வொரு போட்டிக்கு செல்லும்முன்பு தியானம் செய்வது, கடினமான உழைப்புக்குப் பிறகு ஒரே பாடலை திரும்ப திரும்ப கேட்பது, சாம்பியன்ஷ் டிராபி இறுதிப் போட்டி, எம்சிஜி வெற்றி, சிட்னி டிரா, காபா வெற்றி, டி20 கம்பேக் என வெற்றியின் அழுத நேரங்கள், இதயம் உடைந்த நேரங்களில் அமைதியாக உட்கார்ந்திருந்த காலங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

வெற்றியைவிட திறமையை வளர்ப்பதில் ஆர்வம்

டியர் அஸ்வின், உங்களுடன் உலகம் முழுவதும் உள்ள ஆடுகளங்களுக்கு பின்தொடர்ந்துவந்து எப்படி விளையாட்டு பொருள்களை வைக்கவேண்டுமெனத் தெரியாததில் இருந்து உனக்காக ஆதரவு தெரிவிப்பது, உன்னைப் பார்த்து கற்றுக்கொண்டது என அனைத்துமே மகிழ்ச்சி அளிக்கிறது.

விளையாட்டை மிகவும் அருகில் இருந்து பார்க்க உன்னால் வாய்ப்பு கிடைத்தது. அதனால் நான் சிறப்புச் சலுகை பெற்றவளாக உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு ஆர்வமும் கடினம் உழைப்பும் இருந்தால் இந்தப் போட்டியில் நீங்கள் இவ்வளவு தலைநிமிர்ந்து நடக்க முடியும் எனவும் கற்றுக்கொடுத்துள்ளது.

ஆட்ட நாயகன் விருதுகள் எவ்வளவோ வாங்கியுள்ளீர்கள். ஆனால், அதெல்லாம் உங்களுக்கு பொருட்டே இல்லை. தொடச்சியாக உங்கள் திறமையை கூர்மையாக்குவதில்தான் நீங்கள் உழைத்து வந்தீர்கள்.

மீம்ஸை பகிருங்கள், சும்மா இருங்கள்

சில நேரங்களில் அது மட்டும்போதாது. ஏன் உங்களை தேர்ந்தெடுத்தேன் என்பது குறித்து நாம் பேசியிருக்கிறோம். இவ்வளவு செய்வது மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ குறிப்பிடும்படி செய்திருக்கிறீர்கள்.

சில நேரங்களில் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லது. ஓய்வு பெற்றது நல்லததுதான். உங்களுக்கு பிடித்தமாதிரி வாழுங்கள். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள், மீம்ஸை பகிருங்கள், வெறுமனே சும்மா இருக்க நேரத்தை செலவிடுங்கள். கூடுதலாக உண்ணுங்கள், புதிய பந்துவீச்சில் புதிய மாற்றங்களை உருவாக்குங்கள், நமது குழந்தைகளை தொந்தரவு செய்யுங்கள், இவையனைத்தையும் செய்யுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்குப் பிறகு அஸ்வின் தனது ஓய்வு முடிவினை அறிவித்தார்.

டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள் 3,503 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள் அடங்கும். சிறந்த பௌலிங் - ஆல்ரவுண்டராக அஸ்வின் இந்தியாவுக்காக பல வெற்றிகளை குவித்துள்ளார்.

269 வலது கை பேட்டர் விக்கெட்டுகளும் 268 இடதுகை பேட்டர்கள் விக்கெட்டுகளும் அஸ்வின் எடுத்துள்ளார்.

அஸ்வின் ஓய்வுக்கு சச்சின், கபில்தேவ் உள்ளிட்ட பல கிர்க்கெட்டர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு..! ஸ்ரேயாஷ் ஐயர் பேட்டி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே முக்கியமான இலக்கு என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். 2020இல் ரிக்கி பாண்டிங் தில்லை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கும்போது இறுதிப்போட்டி வரை சென்றது குறி... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: ஆப்கானிஸ்தானுக்கு 128 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொ... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் நம்பிக்கை!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான... மேலும் பார்க்க

உற்சாகமாக இருக்கிறது..! ஆஸி. அணித்தேர்வு குறித்து முன்னாள் வீரர் கருத்து!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இளம் வீரரை சேர்த்திருப்பது உற்சாகத்தை அளிப்பதாக முன்னாள் வீரர் கூறியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருக்கி... மேலும் பார்க்க

டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்; ரவீந்திர ஜடேஜா வலியுறுத்தல்!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேல... மேலும் பார்க்க

முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு வருங்கால வைப்பு நிதி முறைகேடு வழக்கில் கைதுசெய்ய ஆணை பிறக்கப்பட்டுள்ளது. சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் என்ற முற... மேலும் பார்க்க