செய்திகள் :

ரூ.1000 கோடி வசூலைத் தாண்டிய 7 இந்தியப் படங்கள் எவை தெரியுமா?

post image
சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படம் புஷ்பா 2 இந்தியா முழுவதும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தன்னா, நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் வட இந்திய மாநிலங்களிலும் வெற்றி நடைபோடுகிறது புஷ்பா 2 திரைப்படம்.

16 நாட்களில் இதுவரை எந்த பாலிவுட் திரைப்படமும் எட்டாத வசூலை வட இந்திய மாநிலங்களில் குவித்துள்ளது.

டிசம்பர் 19ம் தேதியுடன், ரூ.1508 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா திரைப்படங்களிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படமான தங்கல் படத்தின் 2051 கோடி ரூபாய் வசூல் சாதனையை புஷ்பா முறியடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.

ஆமிர் கானின் தங்கல் திரைப்படம்தான் 2000 கோடிக்கு மேல் வசூல் செய்த ஒரே இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

1000 கோடிக்கு மேல் வசூல் செய்த பிற இந்தியப்படங்கள் எவை எனப் பார்க்கலாம்.

1. தங்கல்

தங்கல் | அமீர் கான்

நிதிஷ் திவாரி இயக்கிய இந்தப் படத்தில், ஆமிர் கான், சாக்‌ஷி திவாரி, பாத்திமா சனா ஷேக் ஆகியோர் நடித்திருந்தனர். 90 கோடி பட்ஜெட்டில் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இந்திய திரைப்படங்களிலேயே அதிகபட்ச வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.

2. பாகுபலி 2

பாகுபலி 2

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி 2. இதன் முதல் பாகமே சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்ததால் 250 கோடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 1814 கோடி வசூல் செய்தது.

3. ஆர்.ஆர்.ஆர் (RRR)

RRR

பாகுபலி படங்களின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த இரண்டு வீரர்களை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு எடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவகன் நடித்திருந்தனர்.500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 1288 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

4. கே.ஜி.எஃப் 2

K.G.F 2 | கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. பிரசாந்த் நீல் இயக்கத்தில் கோலார் தங்க வயல் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. ராக்கி பாயாக யஷ் மாஸ் செய்த இந்த திரைப்படம் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 1208 கோடி ரூபாய் வசூல் செய்தது. கே.ஜி.எஃப் மூலம் கன்னட திரைத்துறைக்கு பிரசாந்த் நீல் புத்துயிர் ஊட்டினார் என்றே கூறலாம்.

5. பதான்

பதான்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து வெளியான திரைப்படம் பதான். பாய்காட் பிரச்னைகளாலும் எந்த திரைப்படும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததாலும் முடங்கியிருந்த பாலிவுட்டுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது பதான் திரைப்படம். 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 1050 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

6.ஜவான்

ஜவான் படத்தில் ஷாருக்கான்

தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ஜவான். 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 1152 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

7. கல்கி

Kalki 2898 AD

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பட்சன், கமல் ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. எதிர்காலத்தில் நடப்பாத அமைந்த இந்த அறிவியல் புனைவு திரைப்படம் 550 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. 1052 கோடி ரூபாய் வசூல் செய்தது.

(Source: IMDB)

பாலய்யா வஸ்தாவய்யா- 14: 'உர்ரே... எனக்கு காது நல்லா கேட்கும்ரா!' -பாலய்யா பற்றிய வதந்திகள்

பாலய்யா பற்றி வந்த மிகப்பெரிய வதந்திகள் பற்றி இந்த எபிசோடில் பார்க்கலாமா?ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இதெல்லாம் தெலுங்கு இன்டெஸ்ட்ரியில் சூறாவளியாய் சுற்றியடித்த பாலய்யா பற்றிய வதந்திகள். அதற்கு அ... மேலும் பார்க்க

Pushpa 2 stampede: கூட்ட நெரிசலில் பாதிக்கபட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு..!

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் டிச - 4 ம்தேதி குவிந்தனர்.அங்குப் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டிருந்த நிலையில், அந்தத் திரையர... மேலும் பார்க்க

Allu Arjun: `பாதிக்கப்பட்ட சிறுவன்; சட்ட நடவடிக்கைகள் காரணமாக..!' - ஜாமீனுக்குப் பிறகு அல்லு அர்ஜூன்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் மகன் ஸ்ரீ தேஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்... மேலும் பார்க்க

Allu Arjun: `கவலைப்பட ஒன்றுமில்லை, நான் நன்றாக இருக்கிறேன்' - ஜாமீனுக்கு பிறகு பேசிய அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரச... மேலும் பார்க்க

Allu Arjun Stampede Case : ரசிகை உயிரிழந்த வழக்கு; சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அல்லு அர்ஜுன்

சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வந்திருக்கிறார்.'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்... மேலும் பார்க்க

Allu Arjun : அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்; 'இப்படியா கைது செய்வது?' - நீதிமன்றம் சொல்வதென்ன?

'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகில் பெரும் ... மேலும் பார்க்க