மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரோஹித் சர்மா!
இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா தனது மனைவி ரித்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் வென்றது. அத்துடன் டி20யில் ஓய்வை அறிவித்தார்.
ரோஹித் சர்மா தனது நீண்டநாள் காதலி ரித்திகா சஜ்டாவை முதன்முதலாக 2008இல் சந்தித்தார். பின்னர் டிச.13, 2015இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு சமைரா (5) என்ற பெண் குழந்தை இருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் சர்மா, “மீண்டும் மீண்டும் பல பிறந்தநாள் வர வாழ்த்துகள் ரித்திகா. வாழ்க்கையின் நீ என்னுடன் இருக்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நல்ல நாளாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹித்தின் மனைவி ரித்திகாவுக்கு இது 37ஆவது பிறந்தநாள். இவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
இதனால், பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா கலந்துகொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.