நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? - ப. ...
ஜாகீர் கான் போல பந்துவீசும் சிறுமி..! சச்சின் பகிர்ந்த விடியோ!
முன்னாள் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் போலவே பந்துவீசும் சிறுமியின் விடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த விடியோ பல லட்சம் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விடியோவில், “ வழுவழுப்பாக, அதிகம் மெனக்கெடாமல், பார்க்க அழகாக இருக்கிறது. சுஷீலா மீனாவின் பந்துவீச்சு பாணி ஜாகீர் கான் உங்களைப் போலவே இருக்கிறது. நீங்களும் பார்த்தீர்களா?” எனக் குறிப்பிட்டு அந்த சிறுமியின் விடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்தச் சிறுமி ராஜஸ்தானில் தாரியாவாத் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அறியப்படுகிறது. சமூக வலைதளங்களில் இவரது விடியோ வைரலாகி வருகிறது.
இதற்கு ஜாகீர் ஜான், “நீங்களே சொல்லிவிட்ட பிறகு நான் மறுக்க முடியுமா. அந்தச் சிறுமியின் பந்துவீசும் முறை மிகவும் அழகாக வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. அவர் ஏற்கனவே தனது நம்பிக்கையை அளித்ததுபோல் இருக்கிறது” எனப் பதிலளித்துள்ளார்.
ஜாகீர் கான் (46) இந்தியாவின் முன்னாள் இடதுகை வேகப் பந்துவீச்சாளர். டெஸ்ட்டில் 311, ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
தற்போது, ஜாகீர் கான் வர்ணனையாளராகவும் லக்னௌ அணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.