கேஜரிவாலை விசாரிக்க அமலாக்கத் துறைக்குத் துணைநிலை ஆளுநர் அனுமதி!
கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலின் வழக்குத் தொடர்பாக அமலக்கத்துறைக்கு தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.
தில்லியில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கலால் கொள்கை தொடர்பான வழக்கை விசாரிக்க கேஜரிவால் சார்பில் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டது. இதையடுத்து டிசம்பர் 5ஆம் தேதி கேஜரிவாலுக்கு எதிராக கலால் கொள்கை வழக்கை மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறை துணைநிலை ஆளுநரிடம் அனுமதி கோரியது.
இந்த நிலையில், கலால் கொள்ளை வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறைக்குத் துணைநிலை ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.