இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!
Radhika Apte: ராதிகா ஆப்தேவின் கர்ப்பக்கால போட்டோ ஷூட்; விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் ராதிகா ஆப்தே.
தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி எனப் பல்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். குறிப்பாக 'அந்தாதுன்', 'லஸ்ட் ஸ்டோரீஸ்' முதலிய பாலிவுட் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். திரைத்துறையில் பெண்களுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் எழுப்பியும் வருகிறார்.
ராதிகா ஆப்தே கடந்த 2012-ஆம் ஆண்டு பெனெடிக்ட் டெயிலர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 12 வருடங்களுக்கு பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சில மாதங்களுக்கு முன் அறிவித்த ராதிகா ஆப்தே, டிசம்பர் 14-ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தை பிறப்பதற்கு முன், நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக வலை போன்ற உடையை அணிந்துக் கொண்டு 'baby bump' புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த போட்டோ ஷூட் செய்தேன். நான் இவ்வளவு எடை போட்டு என்னை பார்த்ததில்லை.
இருப்பினும், இது கர்ப்ப காலத்தின் எடை அதிகரிப்பு மட்டுமல்ல. அனைத்து உடல் அசௌகரியங்களும் கூட. எனது கை, கால்கள் வீங்கியிருந்தது, இடுப்பில் எனக்கு வலி ஏற்பட்டது. ஆனால் பின்னர் என் பார்வை மாறியது. நான் இந்த புகைப்படங்களை மிகவும் கனிவான கண்களுடன் பார்க்கிறேன். இப்போது, இந்த மாற்றங்களில் நான் அழகை மட்டுமே பார்க்கிறேன். மேலும் இந்த புகைப்படங்களை நான் எப்போதும் போற்றுவேன்." என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இவரின் கர்ப்பகாலப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் 'கலாசாரம் அழித்துவிட்டது' , போட்டோ ஷூட் என்ற பெயரில் மேற்கத்திய கலாசாரங்களைக் இங்கு கொண்டு வருகிறார்கள் என்று ராதிகா ஆப்தேவை கடுமையாக விமர்த்து வருகின்றனர்.