செய்திகள் :

அந்த வீடியோவால வெளியில தலைகாட்ட முடியல - சீரியல் நடிகர் துரைமணி

post image
சன் டிவியில் 'மருமகள்' ஜீ தமிழ் சேனலில் 'வள்ளியின் வேலன்' ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் துரைமணி. விஜய் டிவியில் 'பாவம் கணேசன்' தொடரிலும் நடித்திருந்தார். நடிப்பு தவிர, சீரியலுக்கு எடிட்டிங் ஸ்டூடியோ, டான்ஸ் ஸ்கூல் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சில யூடியூப் சேனல்களில் இவரது டான்ஸ் ஸ்டூடியோவை நிர்வகித்து வரும் பெண் இவருடன் இருக்கும் போட்டோவைப் போட்டு 'துரைமணியின் ரியல் மனைவி இவங்கதான்' என வீடியோ வெளியாக, நொந்து போனவராக நம்மிடம் பேசினார்.

''இதுக்கு முன்னாடி நானே நிறைய வீடியோக்களைப் பார்த்திருக்கேன். சீரியல் ஆர்ட்டிஸ்டுகளைக் குறிப்பிட்டு இவங்க ரியல் ஜோடின்னு போடுவாங்க. ஆனா அந்தத் தகவல் உண்மையா இருக்கிறப்ப யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா ரெண்டு நாள் முன்னாடி என் ஃபோனுக்கே நண்பர்கள் சிலர் ஒரு வீடியோவை அனுப்பி வச்சாங்க. பார்த்தா பயங்கர ஷாக்.

நான் விருகம்பாக்கத்துல ஸ்டூடியோவையும் வடசென்னை பகுதியில் டான்ஸ் ஸ்கூலும் வச்சிருக்கேன். டான்ஸ் ஸ்கூலை கவனிச்சிட்டிருக்கிறவங்க பள்ளி நாட்கள்ல இருந்து என்னுடன் ஒண்ணாப் படிச்ச தோழி. அவங்களுக்கு கல்யாணமாகி காலேஜ் போகிற மகள் இருக்காங்க. டான்ஸ் அகாடமியில் ஃபங்ஷன் ஏதாவது இருந்தா அப்ப எல்லாரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்திருப்போமில்லையா, அப்படி அவங்க என் பக்கத்துல இருக்கிற மாதிரி போட்டோ என் சமூக வலைதளப் பக்கத்துல இருந்திருக்கு.

அந்தப் போட்டோவை எடுத்து 'இவரு மனைவி இவங்கதான்'னு வீடியோ வெளியிட்டிருக்காங்க. இதுல என்ன பெரிய கொடுமைன்னா எனக்கு இன்னும் திருமணமே ஆகலை. என் சொந்தக்காரங்க சிலர் இந்த வீடியோக்களைப் பார்த்துட்டு 'ஓஹோ சென்னையில கல்யாணமே பண்ணிட்டியா'னு கேக்கறாங்க. தொடர்ந்து துக்கம் விசாரிக்கிற மாதிரி வர்ற போன் கால்களால் சொந்த ஊர்ப்பக்கம் தலைகாட்டவே முடியலை.

துரைமணி

இன்னொருபுறம் என்னுடைய தோழியான அவங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்க. அவங்க கணவர், குடும்பத்தினர் கண்ணுல இந்த வீடியோ பட்டா அவங்க மனசு என்ன பாடுபடும்? ரெண்டு நாளா அவங்களுமே பெரிய மனக் கஷ்டத்துல இருக்காங்க. தொடர்ந்து அவங்க என் டான்ஸ் ஸ்கூலை கவனிச்சிக்கிடுவாங்களானே இப்ப கேள்விக்குறியா இருக்கு.

என் வேலையை விடுங்க, அவங்களைப் பத்தி நாலு பேர் என்ன நினைப்பாங்க?

ஏதோவொரு யூடியூப்னு நான் கூட கடந்து போயிடுவேன். ஆனா அவங்க மீடியா தொடர்பில்லாத ஆள்ங்கிறதால அவங்களுக்கு இது பெரிய பிரச்னையா ஆகி குடும்பத்துல சிக்கலை உண்டாக்கிடுமோனு பயமா இருக்கு.

ஒரு சேனல் வீடியோ இந்த மாதிரி ஒரு வீடியோ போட்டா அதையே எடுத்துப் பலரும் நியூஸ் ஆக்கிடுறாங்க.

உங்க மூலமா இது முழுக்க முழுக்க தவறான தகவல்னு சொல்லிக்க விரும்புறேன். என்னுடைய இந்த தகவலைப் பார்த்துட்டு போட்ட வீடியோக்களை டெலீட் செய்துட்டாங்கன்னா பிரச்னை முடிஞ்சதுன்னு விட்டுடுவேன். அதையும் மீறி வீடியோ இருந்துச்சுன்னா சட்ட நடவடிக்கைதான் எடுக்கணும்'' என்கிறார் இவர்.

BB Tamil 8: "எப்படி ராணவ் கேவலமா நடிக்கிறான்னு சொன்னீங்க?" - வெளுத்து வாங்கும் விஜய் சேதுபதி

இந்த வார செங்கல் டாஸ்கில் ராணவும், ஜெஃப்ரியும் மல்லுக்கட்டி உருண்டதில் ராணவ்விற்குத் தசைநார் கிழிவு ஏற்பட்டது.கீழே விழுந்து தோள்பட்டை வலியால் துடிக்கும் ராணவ்வைப் பார்த்து அன்ஷிதா, ஜெஃப்ரி, சவுந்தர்யா... மேலும் பார்க்க

Bigg Boss 8: ``சௌந்தர்யாவின் அம்மா அப்பா அழுதுட்டிருக்காங்க"- சௌந்தர்யா தோழி நந்தினி

பிக்பாஸ் சீசன் 8 முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே இருப்பதால் நிகழ்ச்சியில் கடைசிக் கட்ட விறுவிறுப்பைப் பார்க்க முடிகிறது. இன்று வார இறுதி எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிற சூழலில், யார் யார... மேலும் பார்க்க

BB Tamil 8: "செம்மையா நடிக்குறாங்க, பச்சையா நடிக்குறாங்க"- யாரைச் சொல்கிறார் விஜய் சேதுபதி?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 76 வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் சிறப்பாகச் செயல்பட்ட முத்துக்குமரன், பவித்ரா, ஜெப்ஃரி மூவரும் அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்றன... மேலும் பார்க்க

Siragadikka aasai: மாட்டிக்கொள்வாரா ரோகிணி? - மீனாவுக்கு வந்த சந்தேகம்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் வீடு வாங்கும் பிளானில் பல சொதப்பல்கள் நடக்கிறது. நேற்றைய எபிசோடில் வீட்டிற்கான மீதமுள்ள பணத்தை புரட்ட மனோஜ் வங்கி அதிகாரிகளைச் சந்திக்கிறார்.ஆனால் அவர்கள் கொடுக்கும் லோ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 75: வன்மத்தைக் கொட்டிய அன்ஷிதா; திருப்பி அடித்ததா முத்துவின் தியாக டிராமா?

இந்த எபிசோடில் பிக் பாஸ் தந்த டிவிஸ்ட் இதுவரை தந்தவற்றில் எல்லாம் பெரியது. ‘உங்க விளையாட்டை உங்களோட வெச்சுக்கங்க.. என் கிட்ட கேம் ஆடாதீ்ங்க. நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ என்கிற மாதிரி முத்... மேலும் பார்க்க

Serial Update: வரிசையாக வெளியேறும் நடிகர்கள்; `சந்தியா ராகம்' சீரியலில் என்ன நடக்குது?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் `சந்தியா ராகம்' தொடரிலிருந்து அடுத்தடுத்து நடிகர்கள் வெளியேறுவது சின்னத்திரை வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளது.சந்தியா ராகம் நடிகர் நடிகைகள்'சந்தியா ராகம... மேலும் பார்க்க