செய்திகள் :

முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் 40 கிலோ வெள்ளி, ரூ.2.85 கோடி ரொக்கம் பறிமுதல்!

post image

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போக்குவரத்துத் துறை முன்னாள் தலைமைக் காவலர் வீட்டில் லோக் ஆயுக்தா காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2.85 கோடி ரொக்கம், 40 கிலோ வெள்ளிக் கட்டிகள், 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இந்த அளவுக்கு பணம், வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதுவும் தலைமைக் காவலர் வீட்டில் ரூ.3 கோடி அளவுக்கு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவைகள் அல்லாமல், தலைமைக் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு இன்னமும் கண்டறியப்படவில்லை.

அது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை சதமடித்து எங்கேயோ சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஏழைகளுக்கு இனி கால் கொலுசுக்கும் வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கம் நிலையில் குவியல் குவியலாக வெள்ளிக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் விடியோக்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

சந்தேகம் வந்தது எப்படி?

போக்குவரத்துத் துறையில் தலைமைக் காவலராக இருந்த நபர், கடந்த ஆண்டு பணியை ராஜிநாமா செய்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக அவர் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வருவாய்க்கும் சொத்துக்கும்

அவர் பெற்ற வருவாய்க்கும் சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மத்திய பிரதேச அரசு ஊழியர்களின் பொருளாதார நிலையை தொடர்ந்து அரசு கண்காணித்து வரும் நிலையில், இந்த விவரம் வெளியே வந்துள்ளது.

கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து 6 பேர் பலி!

கர்நாடகத்தில் கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கர்நாடகத்தில் நெலமங்கலத்தில், சனிக்கிழமை (டிச. 21) நெடுஞ்சாலை 48-ல் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி ஒன்று மோதியது. காரின் மீது... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்!

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பல்பீர் சிங், சுக்பீர் தலால் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தனர். பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, கட்சியின் தில்லி பொதுச் செயலர் ஆஷிஷ் சூத், மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகி... மேலும் பார்க்க

'பாஜகவின் பசப்பு அரசியல்' - முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டம்!

தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில... மேலும் பார்க்க

ராமர் கோயில் இயக்கத்துக்கு சிவசேனை, காங்கிரஸ் கட்சிகளும் பங்களிப்பு: சஞ்சய் ராவத்

ராமர் கோயில் ஒரு இயக்கம் என்றும், இதில் பாஜக, பிரதமர் மோடி மட்டும் பங்கேற்கவில்லை, ஆர்எஸ்எஸ், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்களித்தனர். நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? - ப. சிதம்பரம்

நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என்பது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அங்குள்ள கேமராக்களின் பதிவை வெளியிட அரசு ஏன் மறுக்கிறது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பே... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிராக டிச. 24ல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: மாயாவதி

அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக டிசம்பர் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கி... மேலும் பார்க்க