தலித் மாணாக்கர் வெளிநாட்டில் கல்விகற்க அம்பேத்கர் பெயரில் உதவித்தொகை: கேஜரிவால்
ராமர் கோயில் இயக்கத்துக்கு சிவசேனை, காங்கிரஸ் கட்சிகளும் பங்களிப்பு: சஞ்சய் ராவத்
ராமர் கோயில் ஒரு இயக்கம் என்றும், இதில் பாஜக, பிரதமர் மோடி மட்டும் பங்கேற்கவில்லை, ஆர்எஸ்எஸ், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்களித்தனர்.
நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசிய கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் இன்று இதை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராவத்,
தேசத்தின் வரலாற்றில் ராமர் கோயில் ஒரு இயக்கம். அந்த இயக்கத்திற்கு அனைவரும் பங்களித்தனர். பாஜக மற்றும் பிரதமர் மோடி மட்டுமல்ல.. ஆர்எஸ்எஸ், பாஜக, சிவசேனா, விஎச்பி, பஜ்ரங்தள் மற்றும் காங்கிரஸும் இந்த இயக்கத்திற்குப் பங்களித்தன. இந்த நாட்டில் கோயில் கட்டுவதால் யாரும் தலைவர் ஆக முடியாது.. அப்படிப்பட்டவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று அவர் கூறினார்.
புணேவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்து சேவா மஹோத்சவ தொடக்க விழாவில் மோகன் பாகவத் பேசியதாவது:
நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தினார். அயோத்தியில் ராமர் கோயிலின் முக்கியத்துவத்தை இந்து பக்தியின் அடையாளமாக எடுத்துரைத்தபோதும், பகையை உருவாக்கும் வகையில் பிளவுபடுத்தும் பிரச்னைகளை எழுப்பக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ராமர் கோயில் இருக்கவேண்டும், அது இந்துக்களின் பக்திக்கான தலம். இருப்பினும், பிளவுகளை உருவாக்க வேண்டாம் என்று அவர் எச்சரித்தார். வெறுப்புக்காகவும், பகைமைக்காகவும் ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்னைகளைக் கிளப்பிவிடக்கூடாது. இதற்கு என்ன தீர்வு? நாம் நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறினார்.
இந்தியாவின் பன்முக கலாசாரத்தை எடுத்துரைத்த பாகவத், எங்கள் நாட்டில் பல்வேறு பிரிவுகள் மற்றும் சமூகங்களின் சித்தாந்தங்கள் உள்ளன. இந்துத்துவம் ஒரு நித்திய தர்மம் என்றும் அவர் கூறினார்.